RasiPalan Today July 14:


நாள்: 14.07.2023 - வெள்ளிக்கிழமை


நல்ல நேரம் :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு :


காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


குளிகை :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம் :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


தடைப்பட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல், வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும். நட்பு வட்டம் விரிவடையும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.


ரிஷபம்


பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். மின்னணு சாதனங்களில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.


மிதுனம்


உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகளின் மீது ஆர்வம் உண்டாகும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் மற்றும் பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வரவுகள் நிறைந்த நாள்.


கடகம்


மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். மூத்த சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். அசதிகள் குறையும் நாள்.


சிம்மம்


உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். தடைகளின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் மதிப்பு மேம்படும். கவனம் வேண்டிய நாள்.


கன்னி


வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். ஆன்மிக பணிகளில் தெளிவு ஏற்படும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.


துலாம்


அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமிர்த்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் கோபமின்றி செயல்படவும். சிறு சிறு பணிகளிலும் கவனம் வேண்டும். தாமதம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் லாபகரமான கண்ணோட்டம் அதிகரிக்கும்.  தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.


தனுசு


தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதுவித பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நிலுவையில் இருந்த சரக்குகள் விற்பனையாகும். நன்மை நிறைந்த நாள்.


மகரம்


உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தை தரும். வெளியூர் தொடர்புகளின் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்களின் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.


கும்பம்


வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். சிக்கல் விலகும் நாள்.


மீனம்


பிரிந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார பணிகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.