ஜிமெயில் சேவையை இனி இண்டர்நெட் வசதி இல்லாமலே பெறலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.


180 கோடி பேர் பயன்படுத்தும் ஜிமெயில்:


உலகில் சுமிஆர் 180 கோடி பேரால் பயன்படுத்தப்படும் இமெயில் சேவையாக ஜிமெயில் இருந்துவருகிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துபவர்களும் பெரும்பாலும் ஜிமெயில் பயனாளர்களாகவே இருக்கின்றனர். அலுவல் மற்றும் தனிப்பட்ட வேலைகளுக்கு ஜிமெயில் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதன் பயன்பாடு எந்த நேரத்திலும் தேவைப்படலாம் என்ற நிலையில் தான் இருக்கிறது. நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு இணையத்தைப் பற்றியோ அல்லது இணைய வேகத்தைப் பற்றியோ பிரச்சனை இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு இணையம் எப்போதும் பிரச்சனை தான். இணைய தொடர்பு கிடைக்காது அல்லது வேகம் பெரும் பிரச்சனையாக இருக்கும். அந்த சமயங்களில் ஜிமெயில் சேவையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த சிக்கலைப் போக்கவே ஆஃப்லைன் ஜிமெயிலை அறிமுகப்படுத்துகிறது கூகுள் நிறுவனம்.




ஜிமெயில் ஆஃப்லைன்:


இந்த ஆஃப்லைன் ஜிமெயில் மூலமாக மெயிலை பெறவோ, படிக்கவோ, ரிப்ளை செய்யவோ, மெயிலை தேடவோ முடியும். கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பின்படி ஒரு பயனாளரிடம் இணையம் இல்லையென்றாலும் கூட அவரால் அவருடைய ஜிமெயில் கணக்கிற்கு வந்துள்ள மெயிலை படிக்கவும், அதற்கு பதிலளிக்கவும், மெயிலை தேடவும் முடியும் என்று கூறியுள்ளது.


பயனாளர்களின் ஜிமெயில் கணக்கு அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்துடன் இணைந்தது என்றால், அதனை கையாளும் அட்மின் செட்டிங்ஸை மாற்ற வேண்டியது இருக்கும். அதேநேரத்தில், கூகிள் ஆஃப்லைனை கூகுள் க்ரோமில் மட்டுமே அதுவும் நார்மல் மோடில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூகுள் நிபந்தனைகளை விதித்துள்ளது. இன்காக்னிட்டோ மோடில் இந்த வசதியை பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.


ஜிமெயில் ஆஃப்லைனை எப்படிப் பெறுவது?


பின்வரும் நடைமுறைகளின் மூலம் ஜிமெயில் ஆஃப்லைனை பெறலாம்.



  • முதலில் mail.google.com என்ற இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.

  • இன்பாக்ஸில் செட்டிங்ஸ் என்பதை க்ளிக் செய்யவேண்டும்.

  • அதில், ஆல் செட்டிங்ஸ் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.




அதில் வரும் ஆஃப்லைன் என்ற டேபிற்குச் சென்று எனேபில் ஆஃப்லைன் மெயில் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.




ஜிமெயிலில் தற்போது புதிய செட்டிங்ஸ் தெரியும்.


இதில் இருந்து எந்த நாளில் இருந்து உள்ள ஜிமெயில் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.


அப்போது, பயனாளரின் கணினியில் எவ்வளவு ஸ்பேஸ் இருக்கிறது என்பதை ஜிமெயில் காட்டும்.


சேவ் சேஞ்சஸ் என்பதை கொடுத்ததும் கணினியில் ஆஃப்லைன் ஜிமெயில் சேவை நிறுவப்பட்டுவிடும்.




யாரெல்லாம் பயன்படுத்தலாம்?


உலக அளவில் சுமார் 18 சதவிதம் பேர் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் சுமார் 75 சதவீதம் பேர் தங்களது செல்ஃபோனில் தான் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிமெயில் ஆஃப்லைன் சேவை அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டதால் இந்த புதிய வசதியை அனைவரும் தற்போது பயன்படுத்தலாம். தனியார் நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்களுக்கு அட்மினின் அனுமதி பெற்ற பின் இந்த வசதியை பயன்படுத்தலாம்.