கணினியில் பயன்படுத்தப்படும் குரோம் பிரவுசரில் புதிய அப்டேட் செய்யுமாறு கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது
புது அப்டேட்:
Windows, Mac மற்றும் Linux பயன்படுத்தப்படும் கணினிகளில் Chrome பயனர்களுக்கு Google இந்த வாரம் ஒரு புதிய பாதுகாப்பு அப்டேட்டை வழங்கியுள்ளது
Chrome பிரவுசரில் ஒரு பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குறைபாட்டை பயன்படுத்தி ஹேக்கர்கள், கணினியை தாக்கி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த குறைபாட்டை சரி செய்யும் வகையில், கணினிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு, குரோமில் புது அப்டேட்டை கூகுள் வழங்கியுள்ளது.
எச்சரிக்கை:
குரோமில் உள்ள சிக்கல் மற்றும் Windows/Mac அல்லது Linux அமைப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் எங்களிடம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் Google பயனர்களைப் எச்சரிக்கை வந்துள்ளதால், பிரசனை தீவிரமானதாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
Chrome பயனர்கள் தங்கள் ப்ரவுசரை இப்போதே அப்டேட் செய்ய வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. அப்டேட் செய்தவுடன், கணினியை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும்.அதையடுத்து உங்கள் கணினியில் உள்ள Chrome வெர்சன் 105.0.5195.102 ஆக இருக்க வேண்டும் என்றும், இது உங்கள் Windows, Mac அல்லது Linux PC ஐ இந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வெர்ஷன்- எப்படி தெரிந்துகொள்வது?
உங்கள் கணினியில் உள்ள Chrome சமீபத்திய பதிப்பை இயக்குகிறதா அல்லது அது புதுப்பிக்கப்பட வேண்டுமா என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
குரோம் பிரவுசரில், மேல்-வலதுபுறத்தில் உள்ள மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்து, About Chrome-ஐ கிளிக் செய்து, உங்கள் கணினியில் இயங்கும் பதிப்பைப் தெரிந்து கொள்ளலாம்.