அல்பஃபெட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட ஊதிய தொகுப்பு 2022 இல் $226 மில்லியனாக உயர்ந்தது. இதன் மூலம் அவர் உலகின் அதிக ஊதியம் பெறும் கார்ப்பரேட் தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார்.


ரூ.1,854 கோடி ஊதியம்


கூகுள் தாய் நிறுவனம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த தகவலின்படி, அவரது ஊதியத்தின் ஸ்டாக் அவார்டு போர்ஷன் (பங்கு மானியம்) $218 மில்லியன் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சம்பளம் கடந்த மூன்று வருடங்களாக $2 மில்லியனாக இருந்து வந்தது. அவரது ஊதியத் தொகுப்பின் ஒரு பகுதியாக, ஆல்பாபெட் சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக $5.94 மில்லியன் செலவிட்டதாக தாக்கல் செய்தது. அனைத்தையும் சேர்த்து 226 மில்லியன் டாலர் சுந்தர் பிச்சையின் ஆண்டு ஊதியம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.1,854 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. 



19% உயர்வு


50 வயதான அவர், போட்டித்தன்மை மிக்க துறையில் முன்னணியில் இருந்து வருகிறார். ஓபன்ஏஐயின் சாட்போட் ChatGPT போன்ற AI தயாரிப்புகள் மூலம், கூகுளின் ஆதிக்கத்திற்கு அபாயம் ஏற்பட்டது, அதனால் 2022 இல் அதன் பங்குகள் 39% சரிந்ததன் மூலம், பரந்த தொழில்நுட்ப மந்தநிலையும் நிறுவனத்தை பாதித்துள்ளது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டில் அவை 19% உயர்ந்து மீண்டும் வந்துள்ளன. சுந்தர் பிச்சையின் பங்கு மானியம் என்பது, மூன்று ஆண்டு காலத்திற்கு ஒருமுறை மாறுகிறது. முன்னதாக அவர் 2019 இல் இதே அளவிலான தொகுப்பைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு, அவருக்கு $281 மில்லியன் வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்: MS Dhoni: "என் கிரிக்கெட் வாழ்வின் கடைசிக் கட்டம்” உருக்கமாக பேசிய தோனி..! ஓய்வு பெறுகிறாரா தல? சோகத்தில் ரசிகர்கள்..!


அதிக ஊதியம் பெரும் சிஇஒ-க்கள்


பொதுவாகவே தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு (CEO) ஊதியம் என்பது தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ஆல்பாபெட் மற்றும் பிற பெரிய நிறுவனங்களில் பணிநீக்கங்களின் அலைக்குப் பிறகு இவற்றைப் பற்றி அதிகம் பேசத் தொடங்கி உள்ளனர். செலவுகளை குறைக்க கொத்து கொத்தாக பணியாளர்களை நீக்கும் நிலையில், சிஇஒ-களுக்கு கோடிகளை கொட்டிக் கொடுப்பது குறித்த கேள்வி எழுந்து வருகிறது. ஆப்பிள் நிறுவன CEO Tim Cook கடந்த இரண்டு ஆண்டுகளில் தலா 100 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தத நிலையில், பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 2023 ஆம் ஆண்டு ஊதியத்தைக் குறைத்தார்.



கடைமட்ட ஊழியர்கள் பணிநீக்கம்


2022 இல் ஆல்ஃபாபெட்டில் உள்ள மற்ற நிர்வாகிகளை விட சுந்தர் பிச்சையின் பேக்கேஜ் அதிகம். கூகுளின் அறிவு மற்றும் தகவல்களின் (Google’s knowledge and information) மூத்த துணைத் தலைவர் பிரபாகர் ராகவன் மற்றும் தலைமை வணிக அதிகாரி பிலிப் ஷிண்ட்லர் இருவரும் சுமார் $37 மில்லியன் ஈட்டியுள்ளனர். தலைமை நிதி அதிகாரி ரூத் போரட்டின் ஊதியம் $24.5 மில்லியன் ஆகும்.


அவர்களின் பங்கு மானியம் ஆண்டுவாரியாக வழங்கப்படுகிறது. இதனிடையே, ஜனவரியில், Alphabet சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்தது. அதாவது அதன் உலகளாவிய பணியாளர்களில் 6% குறைத்தது. சில மாதங்களாக செலவினங்களைக் குறைப்பதற்கும், நிறுவனத்தை முன்னேற்றுவதற்கும், எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த பணி நீக்கம் வந்தது. 2022 ஆம் ஆண்டில் ஆல்ஃபபெட் ஊழியர்களுக்கான சராசரி மொத்த ஊதியம் $2,79,802 ஆக இருந்தது என்று தாக்கல் செய்யப்பட்டது. அதைவிட சுந்தர் பிச்சையின் ஊதியம் 808 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.