ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.


ராஜஸ்தான் - பெங்களூரு மோதல்:


வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.


ராஜஸ்தான் அணி நிலவரம்:


நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக தோல்வியுற்ற நிலையில், இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணி முனைப்பு காட்டி வருகிறது. பட்லர், ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், ஹெட்மெயர், ஜுரெல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மை தொடர்கின்றனர். அஷ்வின் - சாஹல் கூட்டணி சுழலிலும், போல்ட்-சந்தீப் சர்மா-ஹோல்டர் கூட்டணி வேகப்பந்துவீச்சிலும் எதிரணிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.


பெங்களூரு அணி நிலவரம்:


நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்திய உத்வேகத்தில் பெங்களூரு அணி களமிறங்குகிறது. கேப்டன் டூப்ளெசிஸ் அதிக ரன்களை அடித்ததற்கான ஆரஞ்சு தொப்பியையும், முகமது சிராஜ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான ஊதா தொப்பியையும் பெற்று இருப்பது கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது. அதேநேரம், பேட்டிங்கில் கோலி, டூப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல்லை தவிர மற்ற வீரர்கள் சோபிக்காதது பெங்களூரு அணிக்கு பலவீனமாக கருதப்படுகிறது. அதோடு, பந்துவீச்சாளர்களும் சற்றே கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது.


மைதானம் எப்படி?


பெங்களூரு மைதானம் வழக்கம்போல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. இரண்டு அணிகளிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளதால், இன்றைய போட்டி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும். 


சிறந்த பேட்ஸ்மேன் - பெங்களூரு கேப்டன் டூப்ளெசிஸ் இன்றைய போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்


சிறந்த பந்துவீச்சாளர் - ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் இன்றைய போட்டியில் பந்துவீச்சில் அசத்தக் கூடும்


யாருக்கு வெற்றி வாய்ப்பு - ராஜஸ்தான் அணி இன்றை போட்டியில் வெல்ல அதிக வாய்ப்பு