ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் அக்கவுண்ட்களுக்கு பாஸ்வேர்ட் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இனிமேல் பாஸ்வர்ட் தேவையில்லை என்றும் பாஸ்கீஸ் மட்டும் இருந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜிமெயில்


அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். கூகுளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் கூகுளில் உள்ள சேவைகள் அனைதையும் மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். கூகுளின் அனைத்து சேவைகளையும் பெற ஒரு ஜி மெயில் (Gmail) அக்கவுண்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


பயனர்கள் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை தொடங்கிவிட்டால், பிளே ஸ்டார் (Play Store), டாக்ஸ் (Docs), சீட்ஸ் (Sheets), மேப்ஸ் (Maps), குரோம் (Chrome), யூடியூப் (Youtube) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இப்படி பல ஆப்ஸ்களை பெற ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பயனர்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டுக்கான பாஸ்வேர்ட்டை மறந்துவிடுகின்றனர்.  இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூகுள் புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது.


பாஸ்கீஸ் (Passkeys)


பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த தற்போது கூகுள், தனது மின்னஞ்சல் அம்சமான ஜி மெயிலில் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பாஸ்கிஸ் (Passkeys) என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. எப்படி நம்ம செல்போனை அன்லாக் செய்யும் போது ஃபிங்கர் பிரிண்ட் (Finger print), ஃபேசியல் ஸ்கேன் (Facial Scan) பயன்படுத்துகிறோமா அதே போன்று தான் ஜிமெயில் ஒபன் செய்யும் போது பாஸ்வேர்ட் மறந்திருந்தால் இதனை பயன்படுத்திக் கொண்டு ஜிமெயிலை ஒப்பன் செய்து கொள்ளலாம்.


வழக்கமான பாஸ்வேர்ட் பயன்பாட்டு முறைக்கு மாற்றாக இருப்பதோடு பயனர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாஸ்கீஸ் என்ற ஆப்ஷனை பயன்படுத்துவது எளிதானது. அதனால் இனி வரும் காலங்களில் பயனர்கள் பாஸ்வேர்ட்டை பயபன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிகிறது.


தற்போதைய சூழ்நிலைக்கு இது கூகுள் கணக்குகளில் மட்டும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் பயனார்களுக்கு பாஸ்கீஸை அப்டேட் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. 


பாஸ்கீஸ் எப்படி பயன்படுத்துவது?



  • முதலில் பயனர்கள் ஜி மெயில் அக்கவுண்டை ஒப்பன் செய்து profile picture icon-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

  • அதற்கு கீழே Manage your Google account என்ற ஆப்ஷன்குள் நுழைந்து security ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • பின்னர், ஜி மெயில் password, finger print, facial scan கொடுக்கும் ஆப்ஷன் இருக்கும். இதில் ஏதோ ஒன்று தேர்வு செய்து ஜிமெயிலை ஒப்பன் செய்யலாம். 

  • இதில் பாஸ்வேர்ட் தெரிந்தால் உள்ளிடலாம். இல்லையென்றால்  finger print, facial scan ஆப்ஷனை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.