மொபைல் விற்பனையில் நம்பர் ஒன் நிறுவனமாக விளங்கக்கூடிய ஆப்பிள் இறுதியாக ஆப்பிள் 12 மொபைல்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அதனுடையை அடுத்த பதிப்பான ஆப்பிள் 13 குறித்த சில கணிப்புகளை Ming-Chi Kuo வெளியிட்டுருக்கிறார். Ming-Chi Kuo ஆப்பிள் மொபைல்போன் மற்றும்  இதர தயாரிப்புகள் குறித்த அறிவிப்பினை துல்லியமாக வெளியிடக்கூடியவர்.

அந்த வகையில் ஆப்பிள் 13 இல் என்ன மாதிரியான‌ வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியிடப்படலாம் என அவர் கணித்துள்ள தகவல்களை தற்போது பார்க்கலாம்.



வடிவமைப்பு (design):


iphone 13,  iphone 13 mini ,  iphone 13  pro ,  iphone  pro max என்ற நான்கு  வகைகளில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் 12 ஆனது , ஐபோன் 5 ஐ போன்று தட்டையான வடிவமைப்பை கொண்டிருந்தது.  இந்நிலையில்  தற்போது வெளியாக இருக்கும்  iphone 13 சீரிஸ் மொபைல்போன்களும்  ஐபோன் 12 ஐ போன்றே இருக்கலாம் என்றும் , சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு வெளியிடப்படலாம் என்றும் தெரிகிறது. மேலும் ஐபோன் 13 ஆனது  ஒயர்லஸ் ஹெட்போன் மற்றும்  ஒயர்லஸ்  சார்ஜிங் தொழில்நுட்பத்தில் வெளிவர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.



திரை அமைப்பு:

திரை அமைப்பை  பொறுத்த வரையில்   iphone 13,  iphone 13 mini ,  iphone 13  pro ,  iphone  pro max  ஆகிய நான்கும் வெவ்வேறு திரை அளவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. அதாவது  iPhone 13 ஆனது  6.1 இஞ்ச் திரையுடனும், iPhone 13 mini ஆனது 5.4-இஞ்ச் திரையுடனும்  ,iPhone 13 Pro ஆனது  6.1 இஞ்ச் திரையுடனும், iPhone 13 Pro Max ஆனது 6.7 இஞ்ச் திரை அளவுடனும் வெளியிடப்பட இருப்பதாக  Ming-Chi Kuo  வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.




புராசஸர் (Processor):

ஐபோன் 13 Processor  ஐ பொறுத்தமட்டில்  A15 Bionic chipset பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. எனவே பேட்டரி பயன்பாடு குறைவாகவும், மொபைலின் வேகம் அதிகமாகவும் இருக்கும். மேலும் இது 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


கேமரா:

கடந்த வெளியீடான ஐபோன் 12 இன்  கேமராவில் சில மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் கொண்டுவந்தது. இந்நிலையில்   iPhone 12 Pro Max  இல் பயன்படுத்தப்பட்ட கேமரா சென்சார்கள் ஐபோன் 13 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் டெலிஸ்கோப்ஃபோட்டோ எடுப்பதற்கான பெரிஸ்கோப் லென்ஸுடன் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் ஐபேடில் பயன்படுத்தப்பட்டுள்ள LIDAR சென்சார் வசதி மற்றும் 5 மடங்கு அளவில் zoom செய்துக்கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிலவினை கூட துல்லியமாக பார்க்க முடியும்.




விலை:

விலையை பொறுத்தமட்டில் ஐபோன் 12 இன் விலை அளவிற்கே விற்பனைக்கு வரும் என  Ming-Chi Kuo  தெரிவித்துள்ளார். ஐபோன் 13 வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இன்னும்  வெளியிடப்படவில்லை. ஆனாலும் அடுத்த வருடம் செப்டம்பர் மாத தொடக்கத்தில்  ஐபோன் 13  விற்பனைக்கு வரலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.