கார்மின் போர்-ரன்னர் 55 என்ற இந்த உடற்பயிற்சி சார்ந்த ஸ்மார்ட் வாட்ச் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் அறிமுகமான பின்னர் தற்போது இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒரு ரவுண்ட் டயலுடன் வருகிறது, மேலும் மூன்று வண்ணங்களில் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் வாட்சை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கார்மின் போர்-ரன்னர் 55ல் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் நீண்ட கால பேட்டரி திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது. 20mm ஸ்ட்ராப் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்சை பிற ஸ்மார்ட் வாட்ச்களிடன் இருந்த்து எளிதாக வித்தியாசப்படுத்த முடியும் என்று கார்மின் கூறுகிறது. SpO2 மானிட்டரின் மற்றும் ஜி.பி.எஸ் வசதியும் இந்த வாட்சில் இடம்பெற்றுள்ளது.  






இந்த கார்மின் 55, 1.04 இன்ச் ரவுண்ட் (Colour) டிஸ்பிலே கொண்டது. 208X208 பிக்செல் resolution கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச்யை சூரிய ஒளியிலும் தெளிவாக பயன்படுத்தலாம் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதன் மேற்புறம் எளிதில் கீறல் மற்றும் உடையாதவண்ணம் வலுவான க்ளாஸினால் செய்யப்பட்டுள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ள ஸ்மார்ட் வாட்ச்யை ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் பயன்படுத்த முடியும். மேலும் இந்திய சந்தையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இணைய சேவைகளிலும் கார்மின் அதிகாரப்பூர்வ இணையத்திலும் இந்த வாட்சை வாங்கலாம்.


அக்வா ப்ளாக் மற்றும் மொன்டெர்ரா க்ரே ஆகிய இரண்டு வண்ணங்களில் சுமார் 20,990 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட் வாட்ச் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


இந்த ஸ்மார்ட் வாட்சின் பேட்டரி இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும் என்றும், ஜி.பி.எஸ் பயன்பாட்டை தொடர்ந்து 20 மணிநேரம் பயன்படுத்தலாம் என்றும் கார்மின் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்மின் போர்-ரன்னர் 55 வாட்சை அலாரங்கள், டைமர்கள், ஸ்டாப் வாட்ச் போன்ற பொதுவான பணிகளைச் செய்ய பயன்படுத்தமுடியும். மேலும் இதய துடிப்பு கண்காணிப்பு, சுவாச விகிதம், உடற்பயிற்சி, மன அழுத்த கண்காணிப்பு, நினைவூட்டல்கள், தூக்கத்தின் அளவு உள்ளிட்ட பலவற்றை கண்காணிக்க உதவும்.