விபிஎன் சேவை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை அளித்துள்ள நிலையில் முதலில் விபிஎன் குறித்து தெரிந்துகொள்வோம். VPN என்பது விர்ச்சுவல் பிரைவேட் நெட்ஒர்க் (Virtual Private Network). அதாவது விபிஎன் பயன்படுத்தும் போது உங்களுடைய தகவல் அனைத்தும் பாதுகாப்பாக ஒரு விபிஎன் சர்வர் மூலம்  மறைக்கப்பட்டு செல்லும். அதாவது உங்களுடைய ஐபி முகவரி மாறி செல்லும். இதனால் நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் விபிஎன் மூலம் அமெரிக்கா, அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்து தேடுவது போல் காட்ட முடியும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், உங்களுடைய லேப்டாப், கணினி அல்லது மொபைல் போன் ஆகியவற்றில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது நீங்கள் ஒரு தகவலை தேட அல்லது அனுப்ப முற்படுவீர்கள்.




அப்போது உங்களுடைய கருவிக்கு ஐபி முகவரி என்ற எண் அளிக்கப்படும். இந்த ஐபி முகவரி மூலம் உங்களுடைய தரவுகள் இணையத்தில் செல்லும். அதாவது நீங்கள் ஒரு கூட்டம் நிறைந்த இடத்தில் இருக்கும் போது உங்களை எப்படி பெயர் அல்லது ஒரு நம்பர் வைத்து அரிய முடியுமோ அப்படி தான் இந்த ஐபி முகவரியும்.  இந்த ஐபி முகவரி வைத்து நீங்கள் இணையதளத்தில் தேடுவது, செல்லும் வலைத்தளங்கள் மற்றும் உங்களுடைய சமூக வலைத்தள கணக்குகள் பயன்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு நீங்கள் உங்களுடைய தகவல் அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்தால் அதற்கு பார்க்ஸி சர்வர் அல்லது விபிஎன் பயன்படுத்த வேண்டும்


Instagram: வயதை கேட்கும் இன்ஸ்டாகிராம்... பயப்பட வேண்டாம்... காரணம் இது தான்!


இந்த நிலையில் தான் விபிஎன் சேவையை இந்தியாவில் நிரந்தரமாக முடக்க வேண்டுமென மத்திய அரசிடம், உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விபிஎன் சேவையை ஆன்லைன் குற்றவாளிகள் அதிகம் பயன்படுத்துவதாகவும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல வெப்சைட்டுகளை விபிஎன் மூலம் இந்திய பயனர்கள் பயன்படுத்துவதாகவும் நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் குறித்த அறிக்கையில் நாடாளுமன்றக் குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.




நாடாளுமன்றக் குழு இப்படியான பரிந்துரையை அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விபிஎன் மூலமே பல தனியார் நிறுவனங்கள் தங்களது வேலையை லாக் இன் செய்து செய்து வருகின்றன. அதனால் விபிஎன் - ஐ முழுவதுமாக தடை செய்யவில்லை என்றாலும் கட்டுப்பாடுகளை இறுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது


Digilocker | ஸ்மார்ட்ஃபோனில் ட்ரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதும், டவுன்லோட் செய்வதும் எப்படி?