புதுச்சேரி முதலியார் பேட்டையில் இரும்பு பட்டறையில் 270 சுளுக்கிகள் பதுக்கி வைத்திருந்த மீனவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவர்களுக்கும், அதை ஒட்டிய நல்லவாடு மீனவர்களுக்கும் இடையே தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்துவதில் மோதல் இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 28ஆம் தேதி நடுக்கடலில் நல்லவாடு மீனவர்களுக்கும், வீராம்பட்டினம் மீனவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நல்லவாடு மீனவர்களுக்கு ஆதரவாக வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் செயல்பட்டனர். கடற்கரையில் ஆயுதங்களுடன் திரண்ட மீனவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.


 


பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கு : வசமாக சிக்கிய மற்றொரு குற்றவாளி பிரேம்குமார்..!




 


மேலும் மோதல் சம்பவம் நடைபெறாமல் இருக்க நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதலியார்பேட்டை 100 அடி ரோடு, சிவா விஷ்ணு நகரில் உள்ள ஒரு இரும்பு பட்டறையில் மீனவர்கள் ஆயுதமாக பயன்படுத்தும் சுளுக்கி தயார் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


உடனே போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் பாபு, தனசெல்வம் மற்றும் போலீசார் இரும்பு பட்டறைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு சோதனை செய்தபோது சுளுக்கிகள் தயார் செய்து பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.




 


Dhinakaran Pressmeet: நான் TV பாக்கல..OPS பத்தி என்கிட்ட கேக்காதிங்க..மழுப்பிய TTV


 


இது தொடர்பாக இரும்பு பட்டறையின் உரிமையாளரான முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்த திருநாவுக்கரசு என்கிற சிவாவை (48) பிடித்து விசாரணை நடத்தினர். அவர் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் குமார் என்கிற அனித் (41), பிரகாஷ் (39), முத்துவேல் (40) ஆகியோர் சுளுக்கி செய்ய சொன்னதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அங்கிருந்து 270 சுளுக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.




தொடர்ந்து முதலியார்பேட்டை போலீசார், ஆயுதம் வைத்திருந்தல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரும்பு பட்டறை உரிமையாளர் திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், சுளுக்கி தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.