தமிழ்நாடு: 



  • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்கின்றனர்.

  • தமிழ்நாடு முழுவதும் மகா சிவராத்ரியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

  • 10,11மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  • கோவை ஈஷா மையத்தில் சிவராத்ரி விழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது.

  • தமிழக இளைஞா்களை தொழில் நிறுவனங்களுக்கு தகுதிப்படுத்துவதே குறிக்கோள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • விரைவில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்விற்கான அட்டவணை வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.


இந்தியா:



  • சிவாராத்ரியை முன்னிட்டு 11.71 லட்சம் அகல் விளக்கு ஏற்றி உஜ்ஜெயின் மக்கள் சாதனை படைத்தனர்.

  • உக்ரைன் நாட்டின் கிவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டதாக மத்திய அரசு தகவல்.

  • உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அமைச்சர்கள் 4 அண்டை நாடுகளுக்கு சென்றடைந்தனர்.

  • உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி பிரான்சு நாட்டு அதிபருடன் தொலைப்பேசியில் உரையாடினார்.

  • பிப்ரவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 1.33 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.


உலகம்:



  • உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

  • உக்ரைனில் கிவ் மற்றும் கார்கிவ் பகுதிகளில் ரஷ்ய படைகள் அரசு அலுவலகங்கள் நோக்கி தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

  • உக்ரைன் நாட்டில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் மரணம். 

  • உக்ரைனிலிருந்து இதுவரை 6.6 லட்சம் போ் வெளியேற்றம் என ஐநா தெரிவித்துள்ளது.


விளையாட்டு:



  • இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் மொகாலியில் தொடங்குகிறது.

  • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டி என்பதால் மைதானத்தில் 50 சதவிகித ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

  • உக்ரைனில் போர் தொடுத்த காரணத்திற்காக சர்வதேச தடகள கூட்டமைப்பு ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண