”நீங்கள் வணிகரோ அல்லது தனி நபரோ ! உங்களது QR குறியீட்டை ஸ்கேன் செய்து பே பண்ணியாச்சுங்க என மொபைல் திரையைக் காட்டியபடி வாடிக்கையாளர்கள் நகர்ந்து கொண்டே இருக்கிறார்களா ! இந்தப் பதிவு உங்களுக்குத் தான்.  Prank payment, Payment screenshot என சில செயலிகள் இருக்கின்றன. உங்களது QR குறியீட்டை ஸ்கேன் செய்து வரும் பெயரை, இந்த செயலிகளில் இட்டு, எத்தனை ரூபாய் என்பதையும் குறிப்பிட்டு ஒரு கிளிக் செய்தால் போதும், பணம் செலுத்தியதைப்  போல அட்சரமாய் அதே போன்ற புகைப்படத்தை நொடியில் உருவாக்கித்தரும்.  Amazon pay, Gpay, Phonepe, Paytm என எதில் வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம், துளியும் கண்டுபிடிக்க முடியாது.



இந்த மோசடி பெரும்பாலும் வணிகர்களைக் குறி வைத்து நிகழ்த்தப்படுகிறது என்றாலும், தனிநபரும் இதில் விதிவிலக்கல்ல. சரி ! மோசடிக்கு ஆளாகாமல் எப்படித் தவிர்க்கலாம் ?

 

முதலில் இது போன்ற போலி பேமெண்ட் செயலிகள் இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பேபண்ணியாச்சு என திரையில் தெரிவது அனைத்தும் உண்மையல்ல. யார் பணம் அனுப்பினாலும், அது உங்கள் கணக்கிற்கு வந்த நொடியில், புஷ்பராஜ் ரிஸீவ்ட்ரெண்டு கோடி பார் சந்தனமரம் என ஸ்பீக்கரில் அறிவிக்கும் வசதி தருகிறார்கள். நிச்சயம் பொருத்திக் கொள்ளுங்கள். தனிநபர் என்றால், பணம் க்ரெடிட் மெசேஜ் வங்கியிலிருந்து வரும் வரை அனுப்பியவரை குறுகுறு எனப் பார்த்துக் கொண்டே இருங்கள். அடுத்த முறை பணமாகவே தர வாய்ப்புண்டு" என ஹரிஹரசுதன் தங்கவேலு என்னும் Ethical Hacking நிபுணர் இதைப் பகிர்ந்துள்ளார்.