கூகுள் நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (competition commission of india) 1337.76 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்ராய்ட் தொழில்நுட்பம் தொடர்பாக சந்தைப்படுத்துதலில் விதிமுறைகளை மீறியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தைப்படுத்துதலில் கூகுள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மாட்ஃபோன்கள் சந்தையில் போட்டியாளர்களை சமாளிக்க தவறான அணுகுமுறைகளை பயன்படுதியுள்ளதாக குற்றம் சாட்டப்படுள்ளது.
இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கூகுளின் போட்டி சார்ந்த விதிமுறைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றியமைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
கூகுள் வரைமுறைகளை மீறியதாக இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்:
ஸ்மாட்ஃபோன்களுக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றழைக்கப்படும் இயங்குதளம் மிகவும் அவசியமானது. அந்தவகையில், ஆண்ட்ராய் என்ற ஓ.எஸ்.-ஐ கடந்த 2005-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் வாங்கியது. அதிலிருந்து ஸ்மாட்ஃபோன்கள் நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தங்களை மேற்கொள்ள தொடங்கியது. அதாவது ஸ்மாட்ஃபோன் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கான ஓ.எஸ். பயன்பாட்டிற்கு ஆண்ட்ராய்ட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த நடைமுறைகளில் கூகுள் நிறுவனம் போட்டியாளர்களுக்கான விதிமுறைகளை மீறியுள்ளாதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து சந்தைகளை கணக்கில் கொண்டு அதனடிப்படையில் கூகுள் நிறுவனம் சந்தையில் ஆளுமை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட் மொபைல் சாதனங்களுக்கான உரிமம் பெற்ற ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கான சந்தை
இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கான ஆப் ஸ்டோர் விற்பனைக்கான சந்தை
இந்தியாவில் வழங்கப்படும் பொதுவான இணைய தேடல் சேவைகளுக்கான சந்தை
இந்தியாவில் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அல்லாத குறிப்பிட்ட மொபைல் இணைய தேடுபொறிக்கான சந்தை
இந்தியாவில் ஆன்லைன் வீடியோ ஹோஸ்டிங் தளத்திற்கான சந்தை (OVHP).
கூகுள் நிறுவனம் பல்வேறு சந்தைகளில் தன் ஆதிக்கத்தை செலுத்தியது மற்ற போட்டியாளர்களின் வாய்ப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையின்போது, ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்திற்கு போட்டியாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் சிஸ்டமான ஐ.ஓ.எஸ். இருப்பதாகவும், அதனால தங்களின் சந்தை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் வாதிட்டுள்ளது.
அதேவேளையில், கூகுளின் இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம், ‘ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நோக்கம் என்பது வேறு. அவர்கள் தரமான பொருட்களையும், தன்பயனர்களுகான அனைத்து வகையான பொருட்களையும் வழங்க வேண்டும் என்று முனைப்பில் செயல்படுகிறது. ஆனால், கூகுளின் நோக்கம் என்பது வேறு. அதாவது, தனது பயனாளர்களை அதிகரிக்க வேண்டும் என்று முனைப்புடன் கூகுள் நிறுவனம் செயல்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
OEM என்ற ஸ்மாட்ஃபோன் விற்பனையாளர்கள் தங்களுடைய பொருள் விற்பனையாக வேண்டும் என்ற காரணத்திற்காக கூகுளின் ஆண்ட்ராய்ட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். அப்போதுதான் அவர்களால் தங்களுடைய தயாரிப்புகளை சந்தைப்படுட்த்த முடியும்.
இதேபோலவே, ஆப் தயாரிப்பாளர்கள்- தங்களுடைய சேவை பயனர்களை அடைய வேண்டும் என்பதற்காக அதற்கான இயங்குதளமாக ஆண்ட்ராய்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை தேர்வு செய்துள்ளனர்.
மூன்றாவது, பயனர்கள் தங்களுக்கு தேவைப்படும் ஆப்கள் மற்றும் சேவைகளை அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு விருப்பம் இல்லை. அதற்கு இடமில்லாதவாறு ஆண்ட்ராய்ட் நிறுவனம் செய்துவிட்டது. பணம் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத ஓ.எஸ். கொண்ட ஸ்மாட்ஃபோன்களை, தேடுதளத்தைதான் பயனர்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில், கூகுள் தன்னை முன்னிறுத்தும் சந்தைகளில் எல்லாம் போட்டியாளர்களுக்கு மிகவும் சவாலான சூழல்களை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் எல்லா சந்தைகளிலும் தன்னுடைய ஆதிகத்தை செலுத்தியுள்ளது. போட்டி நடைமுறைகளை கூகுள் நிறுவனம் தவறாக பயன்படுத்தியுள்ளது.
கூகுள் ஆண்ட்ராய்ட் அல்லது சர்ச் எஞ்சின் என எதுவாக இருந்தாலும், பயனர்களை அதை பயன்படுத்தும்படி பார்த்து கொண்டுள்ளது. இதன் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு விளம்பரங்கள் தொடர்ந்து வருமானம் கிடைத்துள்ளது. சந்தையில் சமமான போட்டி சூழலை ஏற்படுத்தாமல், தன் ஆளுமையால் கூகுள் அதை கையாண்டுள்ளது.
இப்படி விதிமுறைகளை தவறாக பயன்படுத்தியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1337 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.