ஸ்காட்லாந்து ஷெட்லாண்ட் தீவுகளில் மின்சாரம் பெரிய அளவில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மொபைல் போன்கள், இணையம், கணினி ஆகியவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


ஷெட்லாண்ட் தீவுகளில் வியாழன் காலை மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இது பிரதான இணைப்பை வெகுவாக பாதித்துள்ளது.


 






இப்பிரச்சினையை தீர்க்க பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும், முடிந்தால் கூடுதல் தகவல்களை வழங்குவதாகவும் போலீசார் உறுதிப்படுத்தினர்.


அதிகாரிகள் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் மேலும் தங்களுக்கு கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் நிலைமை குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஷெட்லாண்ட் தீவுகள், இங்கிலாந்தின் பிரதான நிலப்பகுதியில் இருந்து வடக்கே 110 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. தீங்கிழைக்கும் வகையில் இந்த செயல் நிகழவில்லை என்றும் கடலுக்கு அடியில் இருந்த மீன்பிடிப்பு இழுவை படகுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.


ஷெட்லாந்துடன் பிரிட்டிஷ் நிலப்பரப்பை இணைக்கும் ஒரே கேபிள், ஃபரோஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு சொந்தமான SHEFA-2 ஆகும். இதுகுறித்து Faroese Telecom நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தொலைபேசியில் பேசுகையில், கப்பலின் காரணமாக விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.


 






இதுகுறித்து பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் நெட்வொர்க்கின் உரிமையாளரான பிடி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "அப்பகுதியில் ஒரு இழுவை படகு மூலம் சேதம் ஏற்பட்டதை கடல் கண்காணிப்பு மூலம் ஃபாரோஸ் டெலிகாம் கண்டறிந்து, இங்கிலாந்து கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தது" என்றார்.


"இதன் காரணமாக, சில ஃபோன்கள், பிராட்பேண்ட் சேவைகள், டிவி மற்றும் மொபைல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கோருகிறோம். 999 எண்ணுக்கு அழைக்க வேண்டியவர்கள் தங்கள் லேண்ட்லைன் அல்லது மொபைலில் இருந்து முயற்சிக்க வேண்டும்" பிடி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.