Vikram Emoji: தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வித்தியாசம்... விக்ரமில் புதியதை புகுத்திய கமல்.. என்ன தெரியுமா..?

விக்ரம் படம் குறித்த அப்டேட் குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு வித்தியாசமான முறையில் ட்விட்டர் பக்கத்தில் எமொஜி ஒன்றை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Continues below advertisement

இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது.தற்போது நடிகர் கமல்ஹாசன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். 

இந்தநிலையில் விக்ரம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூன்று மணிநேரத்திற்கு முன்பு விக்ரம் திரைப்படம் குறித்து இன்று மாலை 6 மணி முதல் புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்து இருந்தது. அதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசன், நடன இயக்குநர் சாண்டி என படத்தில் பணியாற்றிய பலரையும் டேக் செய்து இருந்தனர். 

படம் குறித்த அப்டேட் குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு வித்தியாசமான முறையில் ட்விட்டர் பக்கத்தில் எமொஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது அது ட்விட்டரில் படு வேகமாக வைரலாகி வருகிறது. 


அந்த எமொஜியில் #vikraminaction என்ற ஹாஸ்டேக்குடன் கமல் புகைப்படம் கூடிய எமொஜியை வெளியிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இது பழைய ஸ்டைல் என்றாலும், தமிழ் சினிமாவில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

எப்போதும் தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை உள்புகுத்தி உலக சினிமா வரை எடுத்து செல்லும் கமல், இதையும் வித்தியாசமாகவே கையாண்டு வருகிறார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola