தொழில்நுட்ப சந்தைகளில் பறக்கும் கார்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. சில நிறுவனங்கள் அதன் சோதனை முயற்சியிலும் கூட ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையை சேர்ந்த ‘வினாடா ‘என்னும்  ஆட்டோ மொபைல் நிறுவனம் ஆசியாவின் முதல் பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளது.  ஹைபிரிட் பறக்கும் காராக உருவாக்கப்பட்டுள்ள இதனை, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அறிமுகம் செய்து வைத்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ வினாடா நிறுவனத்தின் இளம் குழுவால் உருவாக்கப்பட்ட  ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் காரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி, இந்த கார் பறக்க தயாராகிவிட்டால் , விரைவில் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், அத்தியாவசிய மருந்து பொருட்களை கொண்டு செல்லவும் , முதற்கட்டமாக பயன்படுத்தப்படும் “ என தெரிவித்தார்.











vinata என்றே இந்த பறக்கும் காருக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் பறவைகளின் தாய் என்பதாகும் என்கிறார்.இந்நிறுவனத்தி சி.இ.ஓ யோகேஷ் ஐயர். இந்த கார் தற்போது prototype என அழைக்கப்படும் முன்மாதிரி வடிவத்தில் மட்டுமே உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வினாடா பறக்கும் கார் முழுமையாக தயாராகி சோதனை ஓட்டத்திற்கு வரும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பறக்கும் காரில் 8  கோஆக்சியல் ரோட்டர்கள்(coaxial rotors)   மற்றும் ஹைபிரிட் மோட்டார்களால் உருவாக்கப்பட்டுள்ளது. coaxial rotors என்பது விமானம் , டிரோன்  போன்ற பறக்கும் வாகனத்தை எந்த திசையில் வேண்டுமானாலும் பறக்க  உதவியாக இருக்கும். வினாடா பறக்கும் காரானது பயோ எரிபொருள் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.




900 கிலோ எடை கொண்ட இந்த வினாடா  பறக்கும் காரில் கிட்டத்தட்ட 250 கிலோ அளவிலான எடையை சுமந்து செல்ல முடியுமாம். இரண்டு இருக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை VTOL  (Verticial takeoff and landing) முறையில் இயக்கலாமாம் அதாவது வினாடா பறக்கும் காரை செங்குத்தாக பறக்கவும்  வைக்லாம், செங்குத்தாக தரையிறக்கவும் வைக்கலாம். தற்போதைய டிரோன் திட்டம் 2021 , பறக்கும் கார்களை வடிவமைக்க தங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது என்கிறார் திட்ட இயக்குநர் யோகேஷ்.


இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:


வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?


கோயில் நிலத்தில் கிஷ்கிந்தா தீம் பார்க்?


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி


அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!


மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?


மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?