ஒவ்வொரு தொழில்நுட்ப மாற்றமும் அறிவியல் கண்டுபிடிப்புகளை முன்னேற்றுவதற்கும், மனித முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகும். செயற்கை நுண்ணறிவில் (AI) இப்போது நாம் காணும் மாற்றம் நம் வாழ்நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய முன்னேற்றமாகும்.


குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மொபைல் அல்லது இணையத்திற்கு மாறியதை விட மிகப் பெரியதாக இருக்க போகிறது. எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு - அன்றாடம் முதல் அசாதாரணமானது வரை - வாய்ப்புகளை உருவாக்கும் திறனை செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளது.


நாம் இதுவரை கண்டிராத அளவில் புதுமையிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அறிவிலும் கற்றலிலும் படைப்பாற்றலிலும் உற்பத்தித்திறனிலும் புதிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது. 


கூகுள் ஜெமினி என்றால் என்ன?


இயற்கையான மொழி செயலாக்கம் (NLP) மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்தி மனித உரையாடல்களை உருவகப்படுத்த கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட் கருவியாகும். இணையதளங்கள், மெசேஜ் பிளாட்பார்ம்கள், செயலிகளுடன் ஒருங்கிணைந்து பயனர் கேட்கும் கேள்விகளுக்கு யதார்த்தமான, இயல்பான பதில்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சாதக, பாதகங்களை பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்.


சாதகங்கள்:


தகவல்களை துல்லியமாக வழங்கும். கூகுளின் தேடல் திறன்களுடன் ஜெமினியை ஒருங்கிணைப்பதன் மூலம் விரிவான, புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பெறலாம். இதனால், மதிப்புமிக்க ஆராய்ச்சி கருவியாகவும் அறிவு ஆதாரமாகவும் விளங்குகிறது.


மல்டிமாடல் திறன்கள்: டெக்ஸ்ட், இமேஜ் உள்ளிட்ட வடிவங்களை பிராசஸ் செய்யும் திறன் கூகுளின் பயன்களை பல்வேறு களங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு விரிவுப்படுத்துகிறது.


பகுத்தறிந்து, சிக்கலைத் தீர்க்கும் திறன்: தர்க்கரீதியான பகுத்தறியும் திறன்களை ஜெமினி  வெளிப்படுத்துகிறது. சிக்கலான தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்கும் சிக்கலைத் தீர்க்கும் சூழ்நிலைகளிலும் பயனுள்ளதாக இருக்கும்.


மேம்பாடு: தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலிருந்தும் ஜெமினி பயன் அடைகிறது. திறன்களை மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லவும் உதவுகிறது.


ஒருங்கிணைப்பு: பிற கூகுள் கருவிகள் மற்றும் சேவைகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்க ஜெமினிக்கு திறன் உள்ளது.


பாதகங்கள்:


அணுகுதல்: ஜெமினியை எளிதாக அணுகுவதில் சிரமம் உள்ளது. ஒப்பிட்டளவில் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. இதன் பரவலான பயன்பாட்டை இதுவே தடுக்கிறது.


தவறான தகவல்கள்: உண்மையான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், ஜெமினி, பிற ஏஐ மாடல்களை போலவே, அதன் பயிற்சி செயல்முறையின் தன்மை காரணமாக எப்போதாவது தவறான தகவல்களை வழங்கலாம்.


கணக்கீட்டு தேவைகள்: ஜெமினியின் மேம்பட்ட தன்மைக்கு குறிப்பிடத்தக்க கணக்கீட்டு வளங்கள் தேவைப்படுகின்றன. இதனால், அதன் செலவு அதிகரிக்கலாம்.


இதையும் படிக்க: WhatsApp: வாட்ஸ் அப்பில் AI புரோஃபைல் ஃபோட்டோ வசதி - புதிய அப்டேட் எப்போது?