வாட்ஸ் அப்-ல் ஏ.ஐ. புரோபைல் ஃபோட்டோ (personalised profile photos) உருவாக்கும் அப்டேட்டை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் வாட்ஸ் அப் பல்வேறு அப்டேட்களை அறிமுகப்படுத்தியது.


 அடுத்தடுத்த வாட்ஸ் அப் அப்டேட்:


மெட்டா நிறுவனம் பயனாளர்களின் வசதிற்கு ஏற்பட பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. சமீபத்தில்,கான்டெக்ட் லிஸ்டில் இல்லாமலேயே தொடர்பு எண்ணை கொண்டு கால் செய்யும் ’in-app dialer’ முறை விரைவில் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதோடு பல்வேறு அப்டேட்கள் வரவிருப்பதாக தெரிவித்திருக்கிறது.  புதிய ஐகான், மெசேஜ், வீடியோ உள்ளிட்டவற்றை ஃபில்டர் செய்யும் வசதி, டார்மோட் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது. 


WABetaInfo தகவலின்படி,  WhatsApp ஆண்ட்ராய்ட் பீட்டா வர்சனில் v2.23.17.14 2'Create AI Profile Picture' என்ற ஆப்சன் இருந்துள்ளது. ஃபேஸ்புக்கில் ஏ.ஐ. ப்ரோபைல் ஃபோட்டோ வசதி உள்ளது. இதில் உங்களின் புரோபைல் ஃபோட்டோவை ஏ.ஐ. உருவாக்கும். நீங்கள் உங்களுக்கு எப்படியான ஃபோட்டோ வேண்டும் என்பதை வார்த்தைகளில் விவரிக்க வேண்டும். அதன்படி, AI, மனித முகத்தை சரும நிறம், டோன், புருவம், மூக்கு, உதடு, வாய், கண் என விவரணையின்படி உருவாக்கும். 


இதில் உங்களுக்கு தேவையான ஹேர்ஸ்டைல் பற்றி கூட வார்த்தைகளில் விவரித்தால் அதை உருவாக்கும். விரைவில் வரவிருக்கும் இந்த அப்டேட்டில் என்ன Large Language Model (LLM) பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. அதோடு, இது டெஸ்டிங்கில் உள்ளது. இன்னும் கூடுதலாக சிறப்பம்சங்களை மெட்டா நிறுவனம் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த அப்டேட் வெளிவர காலமெடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில், பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதில் கவனமெடுத்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வீடியோ மெசேஜ் ஃபார்வேர்ட் செய்யும் வசதி:


வாட்ஸ் அப்-ல் ஆடியோ மெசேஜ் போலவே வீடியோ மெசேஜ் அனுப்பு வசதி அறிமுகப்படுத்தியிருந்தது. இப்போது வீடியோ மெசேஜ்களை ஃபார்வேர்ட் செய்யும் வசதி உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுவாக அனுப்ப வேண்டிய மெசேஜ்களை ஒவ்வொரு முறையும் ரெக்கார்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.


இப்போது வாட்ஸ் அப் செயலில் ஸ்டேட்ஸில் ஹார்ட் வடிவ லைக் ஆப்சன் விரைவில் வர உள்ளது. இது இன்ஸ்டாகிராமில் உள்ளது. நீங்கள் ரியாக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் செய்யலாம்.  Quick ரியாக்ட் செய்து போஸ்ட் பிடித்துள்ளது என்பதை ஒரு லைக் மூலம் தெரிவிக்கலாம். இந்த அப்டேட்கள் விரைவில் கிடைக்கும்.  வாட்ஸ் அப் குழுவில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஒரு குழு இருப்பது குறித்து அறிய முடியும். இன்வைட் லிங்க் இருப்பவர்கள் மட்டுமே குழுவின் விவரங்களை அறிய முடியும். இந்த அப்டேட் பீட்டா வர்சனில் இருக்கிறது. 


வாட்ஸ் அப்பில் இந்த வசதிகள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து மெட்டா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.