சாட் ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


சாட்ஜிபிடி செயலி:


அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன். இதனை சாதாரண மக்களும் பயன்படுத்தும் விதமாக ஓப்பன் ஏஐ நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு சாட்ஜிபிடி எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. இது பயனாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இதனால், ஐஓஎஸ் பயனாளர்களை தொடர்ந்து, ஆண்ட்ராய்ட் பயனாளர்களையும் கவரும் விதமாக, சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, கூகுள் பிளே-ஸ்டோரில் இந்த செயலியை தேடி, இன்ஸ்டால் பட்டனை அழுத்தினால், சாட்ஜிபிடி செயலி ஆண்ட்ராய்ட் வெர்ஷன் அறிமுகமானதும் தாமாகவே, பயனாளர்களின் சாதனங்களில் இன்ஸ்டால் ஆகிவிடும்.  இந்நிலையில், சாட்ஜிபிடி செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


சாட் ஜிபிடி செயலியை எப்படி பயன்படுத்துவது?



  • சாட்ஜிபிடி அம்சத்தை ஏற்கனவே இணையதளத்தில் பயன்படுத்தி பயனாளர் கணக்கை வைத்து இருந்தால்,  சாட்ஜிபிடி செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு ஈமெயில் முகவரி, கூகுள் அல்லது மைக்ரோசாஃப் கணக்கை பயன்படுத்தி உள்ளே நுழையுங்கள். புதிய பயனாளர் என்றால், sign up எனும் ஆப்ஷனை கிளிக் செய்து, புதிய கணக்கை தொடங்குவதற்கு தேவையான விவரங்களை வழங்க வேண்டும். குறிப்பாக செல்போனை எண்ணை பதிவிட வேண்டி இருக்கும். 

  • கணக்கு தொடங்கிய பிறகு பொறுப்பு தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும். அவற்றை படித்து விட்டு அனுமதி கொடுக்க வேண்டும்

  • செயலிக்குள் நுழைந்த பிறகு டெக்ஸ்ட் பார் தோன்றும்

  • அங்கு பயனாளர்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை டைப் செய்து என்ட்டர் பட்டனை கிளிக் செய்யவும்

  • தற்போது உங்களது கேள்விக்கான பல்வேறு சாத்தியக்கூறுகளை சாட்ஜிபிடி செயலி வழங்கும்.


என்ன பதில்களை பெற முடியும்..!


கட்டுரைகளை எழுதுவது முதல் ஒரு புத்தகத்தை சுருக்கமாகக் கூறுவது வரையிலான அனைத்து பணிகளையும் செய்யும் விதமாக சாட்ஜிபிடி உருவாகியுள்ளது. மென்பொருள் துறையில் பயன்படும் கோட்களை எழுதுவது, ரெஸ்யூம் தொடங்கி மென்பொருள் வரை உருவாக்குவது,  தகவலை மொழிபெயர்ப்பது உள்ளிட்ட பலவற்றையும் செய்யும்.


எது முக்கியம்?


கேள்வி எந்த அளவிற்கு தெளிவாக உள்ளதோ சாட்ஜிபிடி அளிக்கும் பதில்களும் அந்த அளவிற்கு தெளிவாக இருக்கும். அதற்கு உதாரணமாக சில கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



  • பாக்டீரியாவிற்கும், வைரசிற்கும் என்ன வித்தியாசம்?

  • உடல்நிலை சரியில்லாமல் விடுமுறை எடுத்த எனது மகனுக்கு விடுப்பு கடிதம் வேண்டும்.

  • Analyze this code and tell me how to fix it: [Paste the code] போன்ற தெளிவான கேள்விகளை முன்வைப்பதன் மூலம், துல்லியமான பதில்களைப் பெறலாம்.