ChatGPT, Grok 3 Ghibli Style: ஸ்டுடியோ கிப்லி :


Studio Ghibli என்பது, பிரபல ஜப்பானிய அனிமேஷனின் தனித்துவமான தோற்ற வடிவத்தைக் குறிக்கிறது. இந்த படமானது மிருதுவான, கண்கவர் வண்ணங்கள், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள், விவரமான சூழல் மற்றும் கனவுப் போல் உணர்த்தும் காட்சிகள் கொண்ட அனிமேஷன் பாணியாகும். 

Continues below advertisement


தற்போது, ஏஐ சேட் பாட் தொழில் நுட்பத்தின் உதவியுடன் ஜிப்லி அனிமேஷன் படங்களை உருவாக்குவது பிரபலமடைந்துவருகிறது. இந்நிலையில் ChatGPT- மூலம் குறைந்த அளவிலான ஸ்டுடியோ கிப்லி-பாணி படங்களை உருவாக்கும் முடியும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. 3 ஸ்டுடியோ கிப்லி-பாணி படங்களுக்கு மேல் வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் மாத ( $20/மாதம் ) சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். 


இருப்பினும், எலான் மஸ்க்கின் x AI-யின் Grok chatbot (Grok 3-ல் இயங்குகிறது) சந்தா செலுத்தாமல் இலவசமாக Ghibli-பாணி படங்களை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், சேட் ஜிபிடி மற்றும் க்ரோக் மூலம் எப்படி ஸ்டுடியோ கிப்லி அனிமேஷன் படங்களை உருவாக்கும் முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம். 


சேட் ஜிபிடி-ல் ( ChatGPT ) ஸ்டுடியோ கிப்லி படங்களை உருவாக்கும் முறை:



  1. முதலில் ChatGPT வலைதளம் அல்லது செயலிக்குள் செல்லுங்கள்

  2. அங்கு இருக்கும் + குறியை கிளிக் செய்யவும்

  3. அதில், உங்களுக்கு வேண்டிய புகைப்படங்களை அப்லோடு செய்யவும்

  4. பின்னர், turn this image in Studio Ghibli theme அல்லது Ghiblify this என்று டைப் செய்து எண்டர் செய்யவும்.

  5. இதையடுத்து, உங்களுக்கு தேவையான ஸ்டுடியோ கிப்லி அனிமேஷன் படம் தயாராகிவிடும்


Also Read: Solar Eclipse: சூரிய கிரகணத்தை ஆச்சரியத்துடன் ரசித்த அமெரிக்க, லண்டன் மக்கள்: டாப் 7 புகைப்படங்கள் !


Grokல் ஸ்டுடியோ கிப்லி படங்களை உருவாக்கும் முறை:


1) Grok வலைத்தளத்திற்குச் செல்லவும், அல்லது உங்கள் X பயன்பாட்டிற்கு நேரடியாகச் சென்று Grok ஐகானைக் கிளிக் செய்யவும்.


2) நீங்கள் Grok தொடக்கப் பக்கத்தில் வந்ததும், மாதிரி Grok 3 எனத் தேர்வுசெய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு ஸ்டுடியோ கிப்லி படங்களாக மாற்ற வேண்டியதை அப்லோடு செய்யவும்


Also Read: கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?


இந்நிலையில், அரசியல் தலைவர்கள் கிப்லி அனிமேஷன் படத்தில் எப்படி இருக்கிறார்கள் என பார்ப்போம்.


1.முதல்வர் ஸ்டாலின்:  கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி




2.தவெக தலைவர் விஜய், மாணவர்களுக்கு பரிசு வழங்கிய படம்




3.ஓபிஎஸ்-இபிஎஸ், சில ஆண்டுகளுக்கு முன்பு