CharGPT
ஏ.ஐ தொழில்நுட்பமான சாட் ஜிபிடி புதிய வசதி ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஜப்பானிய பாரம்பரிய அனிமேஷன் ஸ்டைலான ஜிப்லி ஸ்டைலில் அது காட்சிகளை இலவசமாக உருவாக்கி தருகிறது. முன்பு கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே இருந்த இந்த வசதியை தற்போது அனைவரும் இலவசமாக பயண்படுத்திக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு மூன்று ஜிப்லி ஸ்டைலில் அனிமேஷன் இமேஜை ஒருவர் உருவாக்கிக் கொள்ளலாம்
சாட் ஜிபிடி அறிமுகப்படுத்திய இந்த புதிய வசதி உலகளவில் மக்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை தங்கள் புகைப்படங்களை ஜிப்லி ஸ்டைலில் அனிமேட் ஸ்டைலில் மாற்றி பதிவிட்டு வருகிறார்கள். பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் , திரைப்பட காட்சிகளை இந்த ஸ்டைலில் எடிட் செய்து புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் நிலையில் தனி நபர் சுதந்திரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுனர்கள் எச்சரித்து வருகிறார்கள்
CharGPT யில் புகைப்படங்களை அப்லோட் செய்வது பாதுகாப்பானதா
CharGPT உருவாக்கும் ஜிப்லி ஸ்டைல் புகைப்படங்கள் கலைஞர்களின் உழைப்பிற்கும் திறமைக்கும் எதிரானது என பலர் தெரிவித்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் மக்கள் அப்லோட் செய்யும் புகைப்படங்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தால் தவறுதலாக பயன்படுத்தக் கூடிய ஆபத்தும் இருப்பதாக சைபர் நிபுனர்கள் தெரிவித்துள்ளார்கள். மக்கள் தங்களது புகைப்படங்களை மாற்றச் சொல்லி அப்லோட் செய்கிறார்கள். இந்த புகைப்படங்களை ஏஐ அதன் திறன் மேம்பாட்டிற்காக பயண்படுத்திக் கொள்ளலாம். நமது தொற்றத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் ஏ.ஐ பயண்படுத்த சட்டம் அனுமதிப்பதில்லை என்றாலும் மக்கள் தாங்களே முன்வந்து புகைப்படங்களை அப்லோட் செய்வது ஏ.ஐ தொழில் நுட்பத்திற்கு அந்த உரிமையை கொடுக்கிறது.
சாட் ஜி.பி.டியில் புகைப்படங்களை அப்லோட் செய்வது பாதுக்காப்பானதா என அதனிடம் கேட்டபோது இப்படி பதிலளித்துள்ளது சாட்ஜிபிடி " தனிப்பட்ட நெருக்கமான புகைப்படங்களை பயண்படுத்துவதை தவிர்க்கவும் . சாட் ஜிபிடி யில் அப்லோட் செய்யப்பட்ட புகைப்படங்கள் அதற்கு கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றிய பின் அந்த புகைப்படத்தை பத்திரப் படுத்திக் கொள்வது இல்ல."