சாட் ஜிபிடி நமது வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்களுக்கு தானாகவே ரீப்ளை செய்து நம் நேரத்தை மிச்சப்படுத்துவதாக கூறப்படுகிறது.
சாட் ஜிபிடி
ChatGPT என்பது தற்போது தொழில்நுட்பத் துறையில் அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் இடையேயான போட்டியை ஸ்மார்ட் AI சாட்பாட் அடுத்த நிலைக்கு தள்ளியுள்ளது. ChatGPT நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்திற்கும் பதிலளிக்கிறது, அது நமக்கு ஒரு கவிதை எழுதி கேட்டால் தரும், நம்மிடம் ஒரு புதிர் கேட்க சொன்னால் கேட்கும், உங்களுக்காக பதிவுகள் எழுதுவது என பல விஷயங்களை உள்ளடக்கி உள்ளது என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் உங்களுக்கான வாட்ஸ்அப் செய்திகளுக்கும் ChatGPT பதில் அனுப்ப முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நமக்கு பதிலாக சாட்பாட் மேசேஜ் அனுப்பும்
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் தளமாக WhatsApp உள்ளது, மேலும் மில்லியன் கணக்கான பயனர்கள் தினசரி தொடர்புக்காக பயன்பாட்டை நம்பியுள்ளனர், ஆனால் நாம் பிசியாக இருக்கும் நேரங்களில் எல்லா செய்திக்கும் பதிலளிக்க வாய்ப்பில்லாமல் போகலாம். ஆனால் இப்போது அந்த வேலையை AI சாட்பாட் உங்களுக்காகச் செய்யும் என்பதால், எல்லா செய்திகளுக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டியதும், அனுப்பவில்லையே என்று அஞ்சவும் வேண்டியதில்லை. ஆப்பில் ChatGPT ஐ ஒருங்கிணைக்க WhatsApp எந்த அதிகாரப்பூர்வ ஆதரவையும் வழங்கவில்லை என்றாலும், பயனர்கள் மூன்றாம் தரப்பு வழியாக இதனைச் செய்யலாம்.
எப்படி அணுகுவது?
GitHub இன் உதவியின் மூலம் பயனர்கள் ChatGPT ஐ WhatsApp உடன் ஒருங்கிணைக்க முடியும். டெவலப்பர் ஒரு பைதான் ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார், இது ChatGPT ஐ WhatsApp உடன் ஒருங்கிணைக்க உதவும். இதற்கு நீங்கள் ஒரு லிங்கை ஓபன் செய்து அதனை பதிவிறக்க வேண்டும். அதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
வழிமுறைகள்
- "Download zip" என்பதைக் கிளிக் செய்யவும்.
- டெர்மினலில் "Whatsapp-gpt-main" ஃபைலை திறக்கவும்.
- அதில் “server.py” ஃபைலை இயக்கவும்.
- "ls" என்று உள்ளிட்டு Enter ஐ அழுத்தவும்.
- "python server.py" ஐ உள்ளிடவும்.
- இப்போது உங்கள் தொலைபேசி எண் தானாகவே OpenAI சாட் பக்கத்தில் கட்டமைக்கப்படும்.
- "Verify I'm human" என்ற பாக்சில் கிளிக் செய்யவும்.
- உங்கள் WhatsApp கணக்கிற்குச் சென்றால், OpenAI ChatGPT ஐக் காணலாம்.
- உங்கள் வாட்ஸ்அப்பில் ChatGPT ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, நீங்கள் போட்டிடம் ஒரு கேள்வியைக் கேட்டு முயற்சி செய்யலாம்.