அப்டேட் செய்யாத பழைய கூகுள் குரோம் பிரவுசர் அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்று இந்திய கணினி அவசரநிலை எதிர்வினை குழு (Indian Computer Emergency Response Team - CERT-IN) எச்சரித்துள்ளது.

  


முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 69 இடங்களில் தொடரும் ரெய்டு!


இதுகுறித்து செர்ட்- இன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கூகுள் குரோமில்  பாதுகாப்பு ரீதியாக பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைப்  பயன்படுத்தி இணைய குற்றவாளிகள், பயனர்கள் கணினியின் இயக்க அமைப்புகள் மற்றும் அவற்றிலுள்ள தகவல்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்க முடியும். 


Jio | அதிக டவுன்லோட் வேகம்கொண்ட நெட்வொர்க் `ஜியோ’... ட்ராய் அறிவிப்பு.. அடுத்தடுத்த இடங்களில் யார்?


இதனை மனதில் கொண்டு, கூகுள் நிறுவனம் புதிய குரோம் வெர்சனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் முந்தைய வெர்சனில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.   


எனவே, பயன்பாட்டாளர் இந்த பாதுகாப்பு முக்கியதுவத்தை உணர்ந்து புதிய வெர்சனை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். 96.0.4664.93 என்று கூறப்படுகிற இந்த அப்டேட் கூகுள் குரோம் (டிசம்பர் மாதம் வெளியீடு) விண்டோஸ், மேக், லினக்ஸ் போன்ற இயங்குதளங்களுக்கு கிடைக்கிறது. 


செர்ட்- இன்: 


மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  இந்திய கணினி அவசரநிலை எதிர்வினை குழு (செர்ட்-இன்) அதன் தொடக்கத்தில் இருந்தே பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை குறித்த தகவல் தெரிவிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆன்லைன்  தொழில்நுட்ப ஆபத்துகளை முழுதும் அறிந்திராத மக்களை  இணைய அச்சுறுத்தல்களில் இருந்து இந்த அமைப்பு பாதுக்காக்கிறது.  


கூகுள் குரோம்:


குரோம் என்பது விரைவான, பயன்படுத்துவதற்கு எளிதான மற்றும் பாதுகாப்பான இணைய உலாவியாகும். Androidக்காக வடிவமைக்கப்பட்ட குரோமில் பிரத்தியேகச் செய்திக் கட்டுரைகள், உங்களுக்குப் பிடித்த வலைதளங்களுக்கான உடனடி இணைப்புகள், பதிவிறக்கங்கள், கூகுள் தேடல் மற்றும் உள்ளமைந்த கூகுள் மொழியாக்கம் ஆகியவை கிடைக்கின்றன. 


மேலும், தகவல்களுக்கு