கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) தற்போது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு 'அதி தீவிர' எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 உட்பட பல வெர்ஷன்களுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
அதி தீவிர எச்சரிக்கை
அதி தீவிரம் என்ற குறிப்பிடுவதற்கு காரணம், இந்த வெர்ஷன் ஆண்ட்ராய்டு மொபைல்கள் எளிதில் ஹேக் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி ஹேக் செய்பவர்கள் ஒட்டுமொத்த மொபைலையும் கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பை இந்த மால்வேர் மூலம் பெறுவார்கள் என்பதால் மிக ஆபத்தான ஒன்று என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் முக்கியமான தகவல்களை திருடவும், செயல்பாடுகளை சீர்குலைக்கவும் முடியும் என்று கூறப்பட்டுள்ளது. CERT-இன் கூற்று படி, ஆண்ட்ராய்டு வெர்ஷன் 10, 11, 12, 12L மற்றும் 13ஐ இது பாதிப்பதாக தெரிகிறது.
CERT-In என்பது என்ன?
CERT-In என்பது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இந்திய சைபர் தொழில்நுட்பத்தை பாதுகாப்பதே இதன் நோக்கம். ஹேக்கிங் மற்றும் ஃபிஷிங் உள்ளிட்ட இணையப் பாதுகாப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இந்த நிறுவனம் பொறுப்பாகும். இந்த நிறுவனத்தின் சமீபத்திய எச்சரிக்கை, மிகவும் பிரபலமான மொபைல் ஆபரேட்டிங் சாப்ட்வேர் ஆன, Android இன் பல பதிப்புகளில் உள்ள அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது.
CERT-In ஆல் முன்னிலைப்படுத்தப்பட்ட பதிப்புகளின் பட்டியல் இங்கே:
- CVE-2020-29374
- CVE-2022-34830
- CVE-2022-40510
- CVE-2023-20780
- CVE-2023-20965
- CVE-2023-21132
- CVE-2023-21133
- CVE-2023-21134
- CVE-2023-21140
- CVE-2023-21142
- CVE-2023-21264
- CVE-2023-21267
- CVE-2023-21268
- CVE-2023-21269
- CVE-2023-21270
- CVE-2023-21271
- CVE-2023-21272
- CVE-2023-21273
- CVE-2023-21274
- CVE-2023-21275
- CVE-2023-21276
- CVE-2023-21277
- CVE-2023-21278
- CVE-2023-21279
- CVE-2023-21280
- CVE-2023-21281
- CVE-2023-21282
- CVE-2023-21283
- CVE-2023-21284
- CVE-2023-21285
- CVE-2023-21286
- CVE-2023-21287
- CVE-2023-21288
- CVE-2023-21289
- CVE-2023-21290
- CVE-2023-21292
- CVE-2023-21626
- CVE-2023-22666
- CVE-2023-28537
- CVE-2023-28555
ஒரு வேளை ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டால் அவர்களால் என்னென்ன செய்ய முடியும்:
- கடவுச்சொற்கள், புகைப்படங்கள் மற்றும் நிதித் தரவு போன்ற முக்கியமான தகவல்களை அணுக முடியும்.
- சேவை மறுப்பு நிலைமைகளை (denial of service) ஏற்படுத்தி, மொபைலை பயன்படுத்த முடியாததாக மாற்ற முடியும்.
- சாதனத்தில் ஸ்பேம் சாப்ட்வேர்களை நிறுவ முடியும்.
உங்கள் Android மொபைலை எவ்வாறு பாதுகாப்பது?
உங்கள் Android மொபைலை இந்த பிரச்சனைகளில் இருந்து விலக்கி, பாதுகாப்பாக வைத்திருக்க, பயனர்கள் தங்கள் மொபைலை, அப்டேட் செய்ய வேண்டும். லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்தால், அதற்கான பாதுகாப்பு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன என்று CERT-in கூறுகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு மொபைலை அப்டேட் செய்ய நம்பகமான இடங்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யவும். பெரும்பாலும் மொபைலில் உள்ள சிஸ்டம் அப்டேட்டில் மட்டுமே செய்வது சிறப்பு.