கிரிக்கெட் போட்டியின்போது தெருநாய்கள், பூனைகள் அல்லது பறவைகள் மைதானத்திற்குள் வரும் சம்பவங்கள் அடிக்கடி நாம் பார்ப்பதும், கேள்வி படும் ஒன்று. இதனால், போட்டிகள் அடிக்கடி இடையூறு ஏற்பட்டு சிறிது நேரம் போட்டியை நிறுத்த வேண்டிய சூழ்நிலையி ஏற்படும். நாயோ பறவையோ களத்தில் இறங்குவது சகஜம், ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக்கில் பாம்புகள் மைதானத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..? அப்படியான சூழ்நிலைதான் தினமும் நடந்து வருகிறது. 


இலங்கையில் தற்போது லங்கா பிரீமியர் லீக் என்ற டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடர் தொடங்கப்பட்டது முதலே, மைதானத்தில் பலமுறை பாம்புகள் வந்ததால் போட்டிகள் அடிக்கடி பாதியில் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. 


வைரலான வீடியோ: 


லங்கா பிரீமியர் லீக் போட்டியின் நேரடி போட்டியின் போது மைதானத்திற்குள் பாம்பு புகுந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதில் பீ லம் கண்டி மற்றும் ஜாப்னா கிங்ஸ் இடையேயான போட்டியில் நடந்தது.இந்த போட்டியின்போது, இஸ்ரு உதானா நொடி பொழுதில் உயிர் தப்பினார்.






கடந்த ஆகஸ்ட் 12 அன்று கண்டி மற்றும் ஜாப்னா இடையிலான போட்டி பாம்பு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. இந்தப் போட்டியில் ஜாப்னா வீரர் இசுரு உதான களமிறங்கிக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று மைதானத்திற்குள் வந்தது. உதானா எதிர் திசையில் நடந்து கொண்டிருந்தான், அவருக்கு பின்னால் பாம்பு வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, பாம்பு மிக வேகமாக அவரது கால் அருகில் சென்றது அப்போது, அதிர்ஷ்டவசமாக, பாம்பை பார்த்த உதானா, அதிர்ச்சியடைந்து சட்டென ஒதுங்கி நின்றார். இதைத் தொடர்ந்து, பாம்பு கேமரா மேன் இருந்த பக்கம் சென்றது. அந்த நேரத்தில் அங்கிருந்த அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து ஓடினர்.






ஆசியக் கோப்பை: 


வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி முதல் ஆசியக் கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் நாடே இந்த தொடரை நடத்த இருந்தாலும், இதில் பெரும்பாலான போட்டிகள் இலங்கையில் உள்ள ஸ்டேடியங்களில் நடைபெறுகிறது. 


மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. இந்திய அணி தனது அனைத்து போட்டிகளிலும் இலங்கையில் விளையாடவுள்ளது. பாகிஸ்தானின் முயற்சிகளை மீறி பாகிஸ்தானில் விளையாடுவதில்லை என்ற முடிவில் இந்தியா உறுதியாக உள்ளது. ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறுகிறது.