பி.எம்.டபிள்யூ நிறுவனம் கார்கள் மட்டுமல்லாமல் பல வித ஹை ஸ்பீட் பைக்களையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் பலரும் எதிர்பார்த்த பி.எம்.டபிள்யூ எம் சீரிஸ் பைக்கள் தற்போது சந்தைக்கு வரவுள்ளது. ஏற்கனவே வெளியான பி.எம்.டபிள்யூ எஸ் சீரிஸ் வண்டிகளை அடிப்படையாக கொண்டு இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எம் சீரிஸ் வகை பைக்களை முதல் முறையாக பி.எம்.டபிள்யூ நிறுவனம் வெளியிடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வண்டியின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு :

பி.எம்.டபிள்யூ எம் சீரிஸ் வண்டிகள் தங்களுக்கே உரித்தான கார்பன் வகை வீல்களை கொண்டுள்ளது. இந்த வண்டி பூஜ்யத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட வெறும் 3.1 வினாடிகளே எடுத்துக்கொள்ளும். டைட்டானியம் எஸ்ஹஸ்ட் அமைப்பு கொண்ட இந்த வண்டி உச்சக்கட்ட வேகமாக மணிக்கு 306 கிலோமீட்டர் செல்லும் என்பது கூடுதல் சிறப்பு. இதுபோன்ற பல ஹை ஸ்பீட் பைக்களை தொடர்ச்சியாக பி.எம்.டபிள்யூ நிறுவனம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Cuts through a racetrack like a hot knife cuts butter: the #MRR! 🚀#MakeLifeARide #NeverStopChallenging #BMWMotorrad pic.twitter.com/dzjBlXgBYQ
— BMWMotorrad (@BMWMotorrad) March 18, 2021

இந்த புதிய பி.எம்.டபிள்யூ எம் சீரிஸ் வண்டிகள் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. மேலும் இந்த வாகனத்தின் விலை தற்போதைக்கு 44 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.