ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா மீது தனக்கு என்றைக்கும் சந்தேகம் இருந்ததில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், சசிகலாவை நிரபராதி என நிரூபிக்கும் விதமாகவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென தான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.


சசிகலா மீது வருத்தம் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓ.பி.எஸ், தனக்கு என்றைக்கும் சசிகலா மீது வருத்தம் இருந்தது கிடையாது என பதிலளித்தார். ஜெயலலிதாவுடன் 32 ஆண்டு காலம் இணைந்து பணியாற்றி உள்ள சசிகலா மீது தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக சசிகலா அதிமுக கட்சி அமைப்பை ஏற்றுக் கொண்டால், அவரை கட்சியில் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஓ.பி.எஸ். கூறியிருந்தது குறிப்பித்தக்கது.