விஜய் டிவி டிடி வீல் சேரில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் டிடி அந்த புகைப்படத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவி-யில் தனது ஆங்கரிங் கரியரை ஆரம்பித்த அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் முதன்முதலில் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் செய்திருப்பார். 



ஒரு பேட்டியில் உங்களிடம் உள்ள எந்த திறமையை கண்டு தனுஷ் நடிக்க அழைத்தார் என்று கேட்டபோது, "நானும் அதைத்தான் யோசிக்குறேன், அப்படி என்ன நம்மகிட்ட இருக்குன்னு. ஒரு நாள் தனுஷ் போன் செய்து நான் இயக்குற படம் ஒன்னு இருக்கு, அதுல ஒரு ரோல் பண்ணனும்ன்னு கேட்டார், தனுஷ் மாதிரி ஒருத்தர் வந்து கேட்கும்போது இல்லன்னு சொல்லுவாங்களா யாராவது. நானும் சரி சார் பண்லாம்ன்னு சொல்லிட்டேன். ஒரே ஒரு சீன்தான்னு சொன்னார், நானும் சந்தோஷமா, ஒரே ஒரு சீன் தான் பண்ணிடலாம்னு நெனச்சேன். லேடீஸ்க்கு மெசேஜ் சொல்லணும், அது அவங்களுக்கு நெருக்கமா இருக்குற, எல்லாருக்கும் புடிச்ச ஒரு முகமா இருந்தா நல்லா கனெக்ட் ஆகும்ன்னு சொன்னார். அதுக்கப்புறம் என்ன, அவர் சொன்ன வார்தைக்காக மட்டுமே போகலாம்னு இருந்தேன். அப்புறம் காலங்கள் போச்சு, அப்படி ஒரு கால் வந்ததே மறந்துட்டேன். யாருக்கும் சொல்லல நான், அப்புறம் ஒரு நாள் கால் பண்ணி ஷூட் இருக்கும் அடுத்த வாரத்துலன்னு சொல்லவும் தான் நியாபகம் வந்தது. எனக்கு நைட் தான் ஸீன் இருந்தது, காலேலயே போய்ட்டு அங்க என்ன பிராசஸ் பண்றாங்க என்னன்னு பாத்தேன், பாத்து பாத்து கத்துட்டு இருந்தேன்." என்றார்.



உங்கள் நிகழ்ச்சிக்கு வரும் ஆர்டிஸ்டுகள் மட்டும் நிறைய பேசுகிறார்களே எப்படி, முன்னாடியே தயவுசெஞ்சு பேசுங்கள் இந்து சொல்வீர்களா, அல்லது உங்களுடனான நட்பு காரணமா என்று கேட்ட கேள்விக்கு, "அடிப்படையில் நானே நெறைய பேச மாட்டேன், ரொம்ப சைலண்ட் நான். நிகழ்ச்சில மட்டும் தான் அவ்ளோ பேசுறேன், அதனால அவங்ககிட்ட போய் நெறைய பேசுங்கன்னு சொல்றதெல்லாம் இல்ல. நாங்க ஒன்னும் எப்போதும் ஒண்ணா சுத்திட்டு, ட்ரைவ் போய்ட்டு, ஜாலியா இருக்குற ஆளெல்லாம் கிடையாது, நாங்க எப்போவுமே ஜாலி மோட்ல ஒண்ணாவே பார்ட்டி பண்ணிட்டு இருப்போம்ன்னெல்லாம் இல்ல, அப்படியெல்லாம் ஒரு ம… இல்ல" என்று கூறி நிறுத்திவிட்டு, ஒன்றும் இல்லை என்றார். அதனை தொகுப்பாளர் கேட்டபோது, சிரித்துவிட்டு, 'ஒரு மண்ணும் கிடையாது'ன்னு சொல்லத்தான்பா வந்தேன், இப்படி கோர்த்து விடறியே என்று கேட்டார்.