விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிக வேகமாக வளரும் கருந்துளை ஒன்றை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருந்துளை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், ஒரு நொடியில் ஒரு பூமியை உள்ளிழுக்கும் வேகத்தில் வளர்வதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளதோடு, இதனை `மிகப் பெரியது.. வைக்கோல் போரில் எதிர்பாராத விதமாக விழுந்து ஊசியைப் போன்றது’ எனவும் வானியல் ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளனர்.
இந்தக் கருந்துளை நமது பிரபஞ்சத்தில் இருந்து பார்க்கும் போது அனைத்து ஒளியை விட சுமார் 7 ஆயிரம் மடங்கு வெளிச்சத்தை வெளிப்படுத்துவதால் உலகம் முழுவதும் இருக்கும் பல ஆய்வாளர்களும் இதனைக் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே வகையான இரட்டை நட்சத்திரங்களைத் தேடும் ஸ்கைமேப்பர் தெற்கு சர்வே மேற்கொள்ளப்பட்ட போது, இந்தக் கருந்துளையின் வண்ணங்கள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஆய்வுகள் ஆஸ்திரேலிய வானியல் சொசைட்டியின் ஆய்விதழில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியா தேசியப் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆய்வாளர் முனைவர் க்றிஸ்டோபர் ஓன்கென் இதுகுறித்து கூறிய போது, `இது போன்ற விண்வெளிப் பொருள்களுக்காக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வானியல் ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர். பலம் குறைந்த ஆயிரக்கணக்கான கருந்துளைகளையும் கண்டுள்ளனர். எனினும், இத்தகைய வெளிச்சம் கொண்ட கருந்துளை நம் அனைவரின் பார்வையில் இருந்தும் தப்பித்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.
இரண்டு பெரிய கேலக்ஸிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் இதுபோன்ற பெரிய அளவிலான கருந்துளை உருவாகியுள்ளது. அதிக புவியீர்ப்பு விசை கொண்ட நட்சத்திரங்கள் மரணிக்கும் போது, அவை ஒரு சிறியளவிலான வெளிக்குள் செல்வதால் கருந்துளை உருவாகிறது. மேலும், கருந்துளைகளும் கண்ணுக்குத் தெரியாதவாறு இருப்பதோடு, அதனைச் சுற்றியுள்ள வெளியில் கருந்துளையால் உறிஞ்சப்படும் வெளிச்சம் மூலமாக அது கண்டுபிடிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த கருந்துளை நமது பால்வெளியில் இருந்து கருந்துளையை விட சுமார் 500 மடங்கு பெரியது. மேலும், இந்தக் கருந்துளையின் அளவைக் குறித்து பார்க்கும் போது, நமது பால்வெளியில் இருக்கும் அனைத்து கிரகங்களும் இதன் நிகழ்வுக் கோட்டில் மொத்தமாக பொருந்தும் அளவு பெரியது. எனவே இதில் மோதும் எதுவும் தப்பாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்