சிதம்பரம் அருகே சாலையோரம் இருந்த பேனரை பார்த்து கட்சித் தொண்டர் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்று மகிழ்ச்சியில் ஆழ்த்திய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி நிறுவனத்திற்காக 13 கிராமங்கள் கையாளப்படுவது எப்படி அதனை மீட்டெடுக்க பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.



அப்பொழுது சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றியம் மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் துரை என்பவரின் மகன் அபிராமியின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. அவ்வழியாக சென்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அங்கு வைக்கப்பட்டுள்ள பதாகை பார்த்து விட்டு உடனடியாக காரை நிறுத்தி மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு சென்றார். மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அன்புமணி ராமதாஸ் விழாவிற்கு சென்றது அங்கு இருந்தவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


 






இதையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தொண்டர் துரை மகளை வாழ்த்தி விட்டு பின்னர் அங்கிருந்த மக்களிடம் கலந்து உரையாடி விட்டுச் சென்றார். எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தன் கட்சி தொண்டரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அன்புமணி ராமதாஸ் செய்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக பொறுப்பேற்ற பின் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் கட்சி தொண்டர்கள் உட்பட அனைவரையும் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் தான், சாலையோரம் இருந்த பேனரை பார்த்துவிட்டு கட்சி தொண்டரை நிகழ்ச்சிக்கு சென்றது தற்போது பேசு பொருளாக உள்ளது.




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண