ஆப்பிள் நிறுவனம் தனது கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் புதிய ஐபேட் மாடல்களை தொடர்ந்து புதிய ஆப்பிள் வாட்ச் 7யை அறிமுகம் செய்தது. 


தொழில்நுட்ப யுகத்தில்  ஸ்மார்ட் வாட்ச் ஒரு முக்கிய கேட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக Apple நிறுவனம் தயாரிக்கும் வாட்ச்களுக்கு சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் டிமாண்டும் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸில் 6 வது பதிப்பு வரையில் வெளியிட்டுவிட்டது. இந்நிலையில் அடுத்த பதிப்பான Apple வாட்ச் சீரிஸ் 7 - மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.  இந்த புதிய சீரிஸ் வாட்ச் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.  ஆனால் முந்தைய Apple வாட்ச்சுகளை ஒப்பிடும்போது இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. முக்கியமாக வாட்சின் திரை அளவு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது 40 மிமீ , 44 மிமீ அளவில் ஸ்மார்ட் வாட்சுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் அளவு Apple வாட்ச் 7 சீரிஸில் 41 மிமீ, 45 மிமீ அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Apple நிறுவனம் தனது வாட்ச் திரையில் அளவை  அதிகரிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு அறிமுகமான Apple வாட்ச் சீரிஸ் 4 இன் திரை அளவு அதிகரிக்கப்பட்டிருந்தது. 



பிக்சல் அளவை ஒப்பிடுகையில் 16 சதவிகிதம் அதிக பிக்சலேட் திறனை Apple வாட்ச் 7 சீரிஸ் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. முன்பு பெரிய திரை கொண்ட Apple ஸ்மார்ட் வாட்ச்சின் பிக்சல் அளவு  368 ×448  ஆக இருந்தது. தற்போது  396 × 484 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.இதன் மூலமாக துல்லியமாக தகவல்களை பெற முடியும் என நம்பப்படுகிறது. இது தவிர  முகப்பு திரை டிசைன்கள் சிலவற்றையும் அறிமுகப்படுத்த உள்ளனர். அவற்றை பிரபல நைக்(Nike) மற்றும் ஹெர்ம்ஸ் ( Hermes) நிறுவனங்கள் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வகை டிசைன்களுக்கு  மாடுலார் மேக்ஸ்(Modular Max), கான்டினூம் மற்றும் அட்லஸ்( Continuum and Atlas,) , வேர்ல்ட் டைமர் ( World Timer) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அதிவேக புராசஸர் மற்றும் தட்டையான விளிம்புகளுடன் கூடிய கேஸ் வடிவமைப்பையும் Apple வாட்ச் சீரிஸ் 7 பெற்றிருக்குமாம்.


மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை சரிபார்க்கும் சென்சாரையும் 7 சீரிஸில் இணைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களில் Apple ஸ்மார்ட் வாட்ச்சில்  இதய துடிப்பு, எலக்ட்ரோ காடியோகிராம், இரத்த- ஆக்ஸிஜன் அளவை கணக்கிட உதவும் சென்சார்களை Apple நிறுவனம் படிப்படியாக தனது ஸ்மார்ட்வாட்சில் இணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


 


கலிபோர்னியாவில் நடந்து வரும் இந்நிகழச்சியை நீங்களும் காணலாம்...இதோ அதற்கான லிங்...