தொழில்நுட்ப சந்தையில் தனக்கென தனி சிறப்பம்சங்களுடன் கெத்து காட்டி வரும் நிறுவனம் APPLE. என்னதான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு மவுசு அதிகமாக இருந்தாலும், சிலரின் விருப்ப தேர்வுகளில் ஐபோன் இடம்பெறுவதில்லை.அதற்கான காரணம் தனிநபரின் விருப்பம் சார்ந்தது. மேலும் ஐபோனை அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அதன் தரமான தொழில்நுட்ப வேலைப்பாடுகளால் அதிக வருடங்களுக்கு உழைக்கும் என்பதே ஐபோன் வாடிக்கையாளர்களின் கருத்தாகவும் உள்ளது. இந்நிலையில் ஐபோன் பயனாளர்களுக்கு APPLE நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி ஐபோனை அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் வைத்தால், என்ஜினின் இருந்து வெளியாகும் அதிகப்படியான அதிர்வுகள் உங்கள் ஐபோனின் கேமராவை பாதிப்படைய செய்யும் என கூறியுள்ளது. சிலர் வாகனங்களில் பயணிக்கும் பொழுது மேப் உள்ளிட்ட சில வசதிகளை பயன்படுத்திக்கொள்வதற்காக ஸ்டாண்ட் ஒன்றில் தங்களது மொபைலை பொருத்தி பயணிப்பார்கள். அப்போதுதான் அதிகப்படியான அதிர்வுகளை மொபைபோன் சந்திக்க நேரிடும். இவ்வகை பயணம் ஐபோன் பயனாளர்களில் கேமராவிற்கு ஆபத்து என்கிறது ஆப்பிள் நிறுவனம்.
இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள APPLE நிறுவனம் தனது apple support post (https://support.apple.com/en-us/HT212803) வலைத்தளம் மூலம் ஐபோன் பயனாளர்களை எச்சரித்துள்ளது. இது போல வாகனங்களில் ஏற்படும் அதிர்வுகள் , புவியீர்ப்பு விசையினால் ஏற்படு அதிவுகளை கட்டுப்படுத்ததான் ஐபோனின் புதிய மாடல்களில் OIS என அழைக்கப்படும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் க்ளோஸ் டு லூப் ஆட்டோபோக்கஸ் சிஸ்டம் போன்ற வசதிகளை APPLE நிறுவன வழங்கியுள்ளது.இருந்தாலும் தொடர்ச்சியாக அதிகப்படியான அதிர்வுகளை ஐபோன் சந்திக்கும் பொழுது அதன் குவாலிட்டி குறைய வாய்ப்பிருப்பதாகவும், துல்லியமான புகைப்படங்களை எடுப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.எனவே அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களான பைக், ஸ்கூட்டர், எலெக்ரிக் ஸ்கூட்டர் உள்ளிட்டவைகளில் பயனிக்கும் ஐபோன் பயனாளர்கள் , தங்கள் வாகனங்களில் மொபைலை பொருத்தி பயனிப்பதை தவிர்க்க வேண்டும் என APPLE நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அத்தகைய பயணம் மொபைல்போன் கேமராவில் உள்ள OIS and AF systems ஆகிய இரண்டையும் பாதிக்கும் என Apple தனது எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது.
இன்று கேமரா குவாலிட்டியில் DSLR க்கு இணையான சிறந்த புகைப்படங்களை எடுக்கும் தொழிநுட்பங்களுடன் iphone கேமராக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக விலை கொடுத்து ஒரு மொபைலை வாங்கி அதை சொந்த வாகனத்தில் கூட எடுத்து செல்ல முடியாது என்றால் அது USER FRIENDLY ஆக இருக்க முடியுமா என சில பயனாளர்கள் சமூல வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.