நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது காவல் நிலையத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது


சென்னை பாடி பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அந்தப்புகாரில், மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கும் 9 பேருக்கு வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக ஜெயலட்சுமி கூறினார். அதன்படி குறிப்பிட்ட தொகையையும் பெற்றுக்கொடுத்தார். பின்னர் கடன் தொகையை செலுத்திவிட்டோம். 




ஆனால் கொடுத்தது வட்டி என்றும், அசல் பணத்தை தர வேண்டும் என்றும் ஜெயலட்சுமி உள்ளிட்ட சிலர் மிரட்டுகின்றனர்.  வங்கிக்கடன் எனக்கூறி ஜெயலட்சுமி வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்தது தெரியவந்ததாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தொலைக்காட்சி சீரியலில் நடித்துப் பிரபலமானவர் ஜெயலட்சுமி. சீரியல் மட்டுமின்றி, படங்களிலும் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 'வேட்டைக்காரன்',  'குற்றம் 23', 'விசாரணை', 'அப்பா', 'கோரிப்பாளையம்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.  இவர் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அப்போது இது குறித்து பேசிய அவர், பிரதமர் மோடியின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து வருகிறேன். நான் அவரது ரசிகை. திருக்குறளைப் பற்றி பேசுகிறார். திருவள்ளுவர் பற்றி பேசுகிறார். சீன அதிபரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருகிறார். இதையெல்லாம் பார்த்தால் பெரியாக இருந்தது. மேலும் எனக்கு தேசியக் கட்சியில் பயணிக்க விருப்பம். அதனால்தான் பாஜகவில் இணைந்தேன் என்றார்.


’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!