பிரபல ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களுக்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது  ஐபோன் பயனாளர்களுக்கு 15.1 என்னும் ஐ.ஓ.எஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐ.ஓ.எஸின் அடுத்த பதிப்பான 15.2 இல் Legacy Contact  என்னும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.Legacy Contact  என்பது ஐபோன் பயன்படுத்தும் உங்கள் நம்பிக்கை மற்றும் அன்புக்குறிய நபர்களுக்கு உங்கள் மொபைல்போனில் உள்ள messages, photos, notes உள்ளிட்ட சில முக்கிய தரவுகளுக்கான அணுகலை கொடுக்கும் வசதியாகும். இதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள தகவல்களை , நீங்கள் இணைக்கும் நம்பிக்கைக்குரிய நபர் அவரின் மொபைல் மூலமாகவே உங்கள் மொபைலில் உள்ள புகைப்படம் , குறுஞ்செய்தி உள்ளிட்ட பிற தகவல்களை பார்க்கலாம் என கூறப்படுகிறது. தற்போது பீட்டா என்னும் சோதனை முயற்சியில் உள்ள  Legacy Contact   வசதி விரைவில் 15.2 ஐ.ஓ.எஸ் அப்டேட்டில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும்.



Legacy Contact  வசதியை இணைப்பது எப்படி ?


முதலில் இணைக்க விரும்பும் இரண்டு மொபைல்களிலும் ஐ.ஓ.எஸ் 15.2  இயங்குதள அப்டேட் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். 


பின்னர் setting வசதிக்குள் சென்று உங்கள் profile picture ஐ கிளிக் செய்ய வேண்டும்.


 பின்னர் தோன்றும் திரையில் Password & Security என்பதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.


தற்போது Legacy Contact என்னும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.


அதன் பிறகு  Add Legacy Contact. என்னும் வசதியை கிளிக் செய்தால் டிஸ்கிளைமர் pop up தோன்றும், அதை படித்து பாருங்கள்.




அதன் பிறகு  Face ID, Touch ID அல்லது  password இவற்றுள் ஏதேனும் ஒன்றின் மூலம் அனுகலை கொடுப்பதற்கான செயல்பாடுகளை உறுதிப்படுத்துங்கள்.


அதன் பிறகு அவர் உங்கள் குடும்ப உறுப்பினராக இருந்தால் அவற்றின் மூலம் தேர்வு செய்யலாம் அல்லது காண்டாக்ட் லிஸ்டில் இருந்து வேறு ஒருவரை தேர்வு செய்துக்கொள்ளலாம்.


 Legacy Contact ஐ தேர்வு செய்த பிறகு next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு Continue என்பதை கிளிக் செய்யுங்கள் தற்போது  Legacy Contact  வசதி எப்படி செயல்படுகிறது என்பது குறித்த திரை தோன்றும் .



பிறகு Legacy Contact இணைப்பதற்கான லிங் ஐ-மெசேஜ் வாயிலாகவோ அல்லது  நகலெடுப்பதன் மூலமாகவோ நீங்கள் பெறலாம். அதனை உங்கள் நம்பிக்கைக்குரிய நபருக்கு அனுப்புங்கள். அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மொபைல் போனுக்கான அனுகலை அந்த நபர் பெறுவார்.



இதே போல நிறைய பேரை நீங்கள் இணைத்துக்கொள்ள முடியும்.


 Legacy Contact ஐ நீக்குவது எப்படி ?


Settings -> profile picture ->Apple ID settings->Password & Security->Legacy Contact என்னும் வசதிக்குள் சென்று எந்த நபரின் இணைப்பை நீக்க வேண்டுமோ அதை தேர்வு செய்துக்கொள்ளுங்கள் .அதன் பிறகு தோன்றும்  Remove Contact என்னும் வசதியை கிளிக் செய்துக்கொள்ளுங்கள் பிறகு oரு அறிவிப்பு பாப்-அப் தோன்றும் . அதன் பிறகு  Remove Contact என்னும் வசதியை கிளிக் செய்து , அந்த நபருக்கான அனுகலை நீக்கலாம்.