இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக விளங்கும் ஏர்டெல் , வோடஃபோன் ஐடியா போன்றவை சமீபத்தில் தங்களது மாதாந்திர சந்தாக்களுக்கான கட்டண உயர்வை அதிகரித்தன. இதனால் அதிர்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஜியோவை நம்பியிருந்தனர். ஆனால் ஜியோவும் தனது கட்டண உயர்வை அறிவித்தது. நிலையான தொலைத்தொடர்பு சேவையை உறுதிப்படுத்தவே , இந்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜியோ தெரிவித்ததும் நினைவுகூறத்தக்கது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் உயர்த்திய முழுமையான திட்ட விவரங்கள் பின்வருமாறு 


Vodafone Idea:



மாதாந்திட திட்டம் :


79 ரூபாயில் கிடைக்கும் சேவையானது வருகிற 25 ஆம் தேதிக்கு பிறகு 99 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. 79 ரூபாய் சேவைகளில் கிடைக்கும் சேவைகள்தான் 99 ரூபாயிலும் கிடைக்கும் என்றாலும் 99 ரூபாய்க்கான டாக் டைமை பெறலாம். அதே போல 149 ரூபாயிலிருந்த ஆரம்ப வாய்ஸ் அன்லிமிட்டட் பிளான்  179 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.முன்பு அதிகபட்ச வரம்பாக இருந்த 2,399 ரூ திட்டமானது 2,899 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல 219 ரூ ஆக இருந்த வாய்ஸ் பிளான் 269 ரூபாய்க்கும், 249 ரூபாயாக இருந்த  பிளான் 299 ரூபாய்க்கும், 299 ரூபாயாக இருந்த பிளான் 359 ரூபாயாகவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ரூ.399 என்ற மதிப்பில் இருந்த சந்தா , ரூ459 ஆக மாற்றப்பட்டுள்ளது.449 ஆக இருந்த பிளான் 539 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே போல ரூ.379, ரூ.599, ரூ699, ரூ1499 ஆக இருக்கும் சந்தாக்கள் தற்போது ரூ.459, ரூ.719, ரூ839, ரூ.1799 என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




டேட்டா ஆட்-ஆன் :


டேட்டா ஆட் ஆன் என அழைக்கப்படும் சிறப்பு  டேட்டா பிளான்களும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 3 ஜிபி டேட்டா ரூ 48 என்ற விலையில் கிடைக்கிறது , இதன் விலை ரூ.58 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே போல 12 ஜிபி கிடைக்கும் 98 ரூபாய் பிளானானது 118 ரூபாய் என மாற்றப்பட்டுள்ளது. 50 ஜிபி கூடுதல் டேட்டா 251 என்ற விலையில் கிடைக்கும் நிலையில் அதன் விலை 298 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இறுதியாக 100 ஜிபி கிடைக்கும் 351 ரூ டேட்டா பிளானானது 418 ஆக மாற்றப்பட்டுள்ளது.



Airtel :


மாதாந்திர திட்டம் :


குறைந்தபட்ச திட்டமான  79 ரூபாய் திட்டமானது 99 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  149 ரூபாய் மதிப்பிலான மாதாந்திர திட்டம், இனி 179 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், 2ஜிபி டேட்டா வழங்கப்படும். இதே போல  219 ரூபாய் திட்டத்தினை, 265 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1 ஜிபி டேட்டா கிடைக்கும். அடுத்ததாக 249 ரூபாய் திட்டத்தினை, 299 ரூபாயாக அதிகரித்துள்ளது.முன்பு  298 ரூபாய் கிடைத்த திட்டத்தினை, 359 ரூபாயாக அதிகரித்துள்ளது. 399 ரூபாய் திட்டத்தினை, 479 ரூபாயாகவும்,  449 ரூபாய்க்கு கிடைத்த  திட்டத்தினை, 549 ரூபாயாகவும்  ஏர்டெல் அதிகரித்துள்ளது.379 ரூபாய்க்கு கிடைத்த சலுகைகள் இனிமேல்  455 ரூபாய்க்கும், 598 ரூபாய்க்கு கிடைத்த திட்டம் 710 ரூபாய்க்கும் கிடைக்கிறது. அதே போல 698 ரூபாய் திட்டத்தினை, 839 ரூபாயாக அதிகரித்துள்ளது. 1,498 ரூபாய் திட்டத்தினை, 1,799 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 365 நாட்கள் வேலிடிட்டியாகும். மேலும் 2,498 ரூபாய் திட்டத்தினை, 2,999 ரூபாயாக அதிகரித்துள்ளது.




டேட்டா ஆட்- ஆன் :


48 ரூபாய் திட்டத்தினை, 58 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். 98 ரூபாய் திட்டத்தினை, 118 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 12 ஜிபி டேட்டா கிடைக்கும். இதுவே 251 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை, 301 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் 50 ஜிபி டேட்டா கிடைக்கும்.


வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரே விலையிலான திட்டங்களைதான் அறிவித்துள்ளன. இவை இரண்டையும் ஒப்பிடுகையில் ஜியோவின் விலை சற்று குறைவாக தோன்றலாம் ஆனால் மாதாந்திர பிளான் சலுகைகளை ஒப்பிடுகையில் வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஜியோவை விட குறைவாகவே தருகின்றன.


ஜியோ:


மாதாந்திர திட்டம் :


அதுவரையில் 75 ரூபாய்க்கு கிடைத்த வாய்ஸ் பிளானானது , இனிமேல் 71 ரூபாய்க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 129 ரூபாய்க்கு கிடைத்த அன்லிமிட்டட் வாய்ஸ் பிளான் இனி 155 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. 149 ரூபாயாக இருந்த பிளான் , 179 ரூபாய்க்கும். 149 ரூபாயாக இருந்த பிளான் 179 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது..199 ரூபாய்க்கு கிடைத்த பிளான் 239 ரூபாய்க்கும். 249 ரூபாயாக இருந்த பிளான் 299 ரூபாய்க்கும் உயர்வை கண்டுள்ளது. இதே போல 399 ரூபாய் மாதாந்திர பிளானின் விலை இனிமேல் 479 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 444 ரூபாய் என்ற 56 நாட்கள் வேலிடிட்டிகொண்ட பிளானானது இனிமேல் 533 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.329 ஆக இருந்த  84 நாட்கள் வேலிடிட்டி பிளான் இனிமேல் 395 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல ரூ.555 ஆக இருந்த பிளான் 666 ரூபாயகவும், 599 ஆக இருந்த பிளான் 719 ஆகவும், ரூ.1299 ஆக இருந்த பிளான் , ர்ரு.1559 ஆகவும், ரூ.2399 ஆக இருந்த பிளான் ரூ. 2879 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. 




டேட்டா ஆட்-ஆன் :


இதுவரையில் 51 ஆக இருந்த கூடுதல் டேட்டா பிளானானது இனிமேல் 61 ரூபாயாகவும் , ரூ.101 ஆக இருந்த  பிளான் ரூ.121 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 50 ஜிபி டேட்டா பிளானானது 251 ரூபாயிலிருந்து 301 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.