என்னதான் நாளுக்கு நாள் புதிய புதிய தொழில்நுட்பம் கூடிய ஆண்ட்ராய்ட் மொபைல்கள் சந்தைப்படுத்தப்பட்டாலும் ஐபோனுக்கான மவுசு இன்றும் குறையவில்லை. பலரின் விருப்ப தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் ஐபோன் மாடல்களின் விலைதான் பலரின் கனவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆனாலும் அவ்வபோது அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் விலை சலுகைகள் பயனாளர்களுக்கு சற்று இன்ப அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  iphonne 12 pro மாடல்களில் விலையை அதிரடியாக குறைக்கப்பட்டு அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1,19,900 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12 ப்ரோவானது தற்போது  ரூ. 94,900  என்ற விலையில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.




விலை குறைப்பு என்றவுடன் குறிப்பிட்ட நிறம் அல்லது  குறிப்பிட்ட வசதி கொண்ட மொபைல் போனுக்குதான் என நினைக்க வேண்டாம். கிராபைட், கோல்டு, பசிபிக் புளூ மற்றும் சில்வர் என அனைத்து நிறங்கள் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  256 ஜிபி மாடலை பொருத்தவரையில் , அதன்  விலை ரூ. 99,900 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1,29,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 30,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல வேரியண்ட்  512 ஜிபி விலை ரூ. 1,07,900  என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.முன்னதாக இதன் விலை 1,49,900 என நிரண்யம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் 42,000 ரூபாய் என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறுகிய கால சலுகையாக மட்டுமே இருக்கும் என தோன்றுகிறது. உங்களுக்கு ஐபோன் வாங்கும் தேவை மற்றும் விருப்பம் இருந்தால் இது ஒரு சிறப்பான ஆஃபராக இருக்கும்.




ஐபோன் 12 ப்ரோ பொறுத்தவரையில் 6.1-inch திரை மற்றும் Super Retina XDR டிஸ்ப்ளே வசதிகளை கொண்டுள்ளது.A14 Bionic chip வசதியுடன் உருவாக்கப்பட்டிருப்பதால் மொபைலின் வேகம் மற்ற மாடல்களை காட்டிலும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் கூடுதல் வசதிகளை அமேசான் தளத்தில் காணலாம்.கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி  ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 மினி வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் பெறலாம் என்ற சலுகையை ஏற்படுத்தி கொடுத்தது. அவ்வபோது தனது ஐபோன் மாடல்களில் சில சலுகைகளை ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்தாலும் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கினால்தான் அதன் ஆரம்ப விலை குறையை வாய்ப்புண்டு.