Apple நிறுவனம் அமெரிக்காவில் ’Pay Later' சேவையை அறிமுகம் செய்துள்ளது.அதாவது வட்டியோ, தாமத கட்டணமோ இல்லாமல்  Apple-ன் ஐஃபோன், ஐபேட் உள்ளிட்டவைகளை வாங்கலாம். பிறகு, கட்டணம் செலுத்தலாம்.


உலக அளவில்  Apple நிறுவனத்தின் ப்ராடக்ளுக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. மக்களின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.


பிக்சர் க்வாலிட்டி, டேட்டா செக்யூரிட்டி உள்ளிட்ட பலவற்றிற்காக ஐபோன் விரும்பப்படுவதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், ஐபோன் என்றால் ஒரு க்ரேஸ் எல்லாரிடமும் உண்டு. தரமான சாஃப்வேர் அதில் அடங்கும்.


Buy Now, Pay Later :


அமெரிக்காவில் மட்டும்  Apple நிறுவனம் தங்களது ப்ராடக்ட்களை வாங்குவதற்கு லோன் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலில், வாங்கப்பட்ட ஐஃபோன் அல்லது ஐபேட் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. பிறகு, ஆறு வாரங்களுக்குள் நான்கு தவணைகளாக கட்டண தொகையைச் செலுத்தலாம் என்று  Apple நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெறுவதற்கு வாடிக்கையாளார் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள பிரத்யேக இணைப்பில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆறு வாரங்களுக்கு பின்னர் செலுத்தப்படும் கட்டணத்திற்கு வட்டியோ, தமாதம கட்டணமோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.’Buy Now, Pay Later' விதியின் மூலம் 50 அமெரிக்க டாலர் முதல் 1000 டாலர்கள் வரை விண்ணப்பிக்கலாம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் லோன் தொகையை திருப்பி செலுத்தலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ’Apple Pay' மூலம் கட்டணம் செலுத்திம் ரீ-டெயில் விற்பனையாளர்கள் மூலமும் இந்த வசதியினை பெறலாம். 


இந்த வசதி தொடர்பாக 'Apple Pay’-ன் துணை தலைவர் ஜெனிஃபர் பெய்லி (Jennifer Bailey) குறிப்பிடுகையில், “வாடிக்கையாளர்களின் நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தினை செயல்படுத்த முன்வந்ததாகவும்,அதனாலேயே, வட்டியில்லாத லோன் வழங்க முடிவெடுத்ததாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.


கிரெடிட் கார்ட்டில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாத அளவிற்கு ஆப்பிள் வாலட் - மூலம் இந்த சேவையை பெறலாம். ஆறு வாரங்களுக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களையும் ட்ராக் செய்யும் வசதியும் உள்ளது.


லோன் செலுத்துவதற்காக டெபிட் கார்டுகளை 'Apple Pay’ - உடன் லிங்க் செய்ய வேண்டும். அதன் மூலம் கட்டணத்தை திருப்பிச்செலுத்தலாம். ’Apple Pay' பண பரிவர்த்தன முறையை அனுமதிக்காத விற்பனையாளர்களிடமிருந்து இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியாது என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளார்.


இந்த சேவை அமெரிக்கா, கலிஃபோர்னியா பகுதிகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ‘Apple Financing LLC’ மற்றும் கலிஃபோர்னியாவில் California ’Financing Law license’ இந்த 'Pay Later' சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ.எம்.ஐ. வசதியில் வட்டி செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், இதில் அப்படியில்லை. ஐஃபோன், ஐபேட் பர்சேஸ்களுக்கு வட்டியில்லாமல், ஆறு வாரத்திற்குள் கட்டணத்தை செலுத்தலாம் என்ற அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த முறை உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுக செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.