நேற்று நடைபெற்ற ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது பல புதிய தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. Apple நிறுவனம் தனது 'Spring loaded' நிகழ்வு குறித்த முக்கிய தகவல் ஒன்றை அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையின் மூத்த தலைவர் கிரெக் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் மினி மற்றும் ஐமேக் ஆகியவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையின் மூத்த தலைவர் கிரெக் ஒவ்வொரு தயாரிப்புகளாக வெளியிட தொடங்கினார். இந்தமுறை ஆப்பிள் நிறுவும் ஆப்பிள் 'ஏர் டேக்' என்ற புதிய கருவி ஒன்றை வெளியிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாணயத்தை போல உருண்டையாக காணப்படும் இந்த கருவி ஒரு ட்ராக்கர் (Tracker Device) போல செயல்படும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
அடுத்தபடியாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ மேக் கணினி ஒன்றை வெளியிட்டுள்ளது, சிரி ரிமோட்டுடன் கூடிய ஆப்பிள் டிவி, புதிய ஐ போன் 12 (purple நிறம்), ஐ பேட் ப்ரோ, எம் 1 சிப் பொருத்தப்பட்டு 5ஜி வசதியுடன் அல்ட்ரா பாஸ்ட் வேகத்தில் 12.9 இன்ச் டிஸ்பிலே கொண்ட ஐ பேட் ப்ரோ ஆகிய தயாரிப்புகளை ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் ஆப்பிள் தனது புதிய ஐ போன் 12ஐ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியானபோது இந்திய மதிப்பில் 77 ஆயிரத்து 990 ரூபாய்க்கு இந்த மொபைல் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் சிரி ரிமோட்டுடன் செயல்படக்கூடிய புதிய டிவி ஒன்றையும் இம்முறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டால்பி விஷன் கொண்ட இந்த ஆப்பிள் டிவி ஏ 12 பயோனிக் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய 4K ஆப்பிள் டிவியை பயனாளர்கள் தங்கள் ஐபோனில் உள்ள லைட் சென்சாரைப் பயன்படுத்தி சிறிய அளவிலான மாற்றங்களை செய்து பயன்படுத்திக்கொள்ளமுடியும். ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ரொனால்ட் என்பவர்களால் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் 1976ம் தொடங்கப்பட்டு குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் 3G போனை கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது நினைவுகூரத்தக்கது. மொபைல் மற்றும் கணிணி துறையில் பெரும் புரட்சியை ஆப்பிள் செய்து வருகிறது.