இந்திய நேரப்படி நேற்று முன் தினம் (18 நவம்பர்) மாலை நிலா பூமியின் நிழல் பாதையைச் சுற்றிச் சென்றது.இதனால் ’கிட்டத்தட்ட முழு சந்திர கிரகண’ (“almost total” lunar eclipse) நிகழ்வு ஏற்பட்டது.அமெரிக்க நேரப்படி நேற்று நிகழ்ந்த இந்த கிரகணத்தைப் பற்றி நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனம் பதிவு செய்துள்ளது. 






இந்த வகையான சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது? 


பூமியின் இருளான அதன் நிழல் பக்கத்தை அம்ப்ரா (umbra) என்பார்கள். சுரியன் பூமி மற்றும் நிலா ஒரே நேர்கோட்டில் வரும்போது நிலா பூமியின் இந்த நிழல் பகுதியில் முழுவதும் சென்று மறைந்துகொள்வதால் சந்திர கிரகணம் ஏற்படும். இதுவே அதன் நிழலை நிலா தொட்டுவிட்டுக் கடக்கும்போது இந்த வகையான ‘கிட்டத்தட்ட முழு சந்திர கிரகண’ நிகழ்வு ஏற்படுகிறது.






இந்த கிரகணம் கிழக்கு ஆஸ்திரேலியா, வடகிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தெரிந்தது. அதனால் ஈ.எஸ்.டி நேரப்படி நவம்பர் 19 அதிகாலை 4.03 மணிக்கும் பசிஃபிக் நேரப்படி அதிகாலை 1:03 மணிக்கும்  பார்க்க முடிந்தது. 







இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணமாகக் கருதப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் 23 நொடிகள் இந்த கிரகணம் நீடித்தது. கடைசியாக நீண்ட சந்திர கிரகணம் ஏற்பட்டது 1440 பிப்ரவரியில். அது சுமார் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் மற்றும் 46 நொடிகள் நீடித்தது. அடுத்த 648 வருடங்களுக்கு இதுதான் மிக நீண்ட ‘கிட்டத்தட்ட முழு சந்திர கிரகண’ நிகழ்வாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அடுத்த நிகழ்வு 8 பிப்ரவரி 2669ம் ஆண்டிலாம்.  அடுத்த ரெண்டு மூணு தலைமுறைக்குச் சொல்லி வைப்போம்!