ஆன்லைன் விற்பனைத்தளங்களில் முக்கியத்தளமான அமேசான் அவ்வப்போது சிறப்பு தினங்களை அறிவித்து ஆஃபர்களை கொடுப்பது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களிலும் தள்ளுபடி அறிவிப்பு உண்டு.. அதேபோல் அமேசான் பெஸ்டிவல், அமேசான் ப்ரைம் டே சேல் போன்ற தள்ளுபடி விற்பனையும் உண்டு. அதன்படி இந்த ஆண்டுக்கான Amazon Prime Day இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது. ஜூலை 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் அமேசான் ப்ரைம் டே விற்பனை என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமேசான் ப்ரைம் டே..

இந்த ஆஃபர் டேவில் Amazon Prime வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கப்படும். அதாவது நீங்கள் ப்ரைம் வாடிக்கையாளராக இருந்தால்மட்டுமே இந்த ஆஃபருக்கு பொருந்துவீர்கள். அமேசான் ப்ரைம் ஓடிடிக்காக பலரும் சப்ஸ்கிரைப் செய்திருக்கும் நிலையில் இந்த ஆஃபருக்கு பொருந்தும் விதமாக ப்ரைம் வாடிக்கையாளர்கள் ஏராளமானவர்கள் இருப்பார்கள். அவர்களை குறி வைத்தே இந்த ஆஃபர் டேவை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடிக்கான நாளின் ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் போன்கள் போன்ற பல கேட்டகரிகளில் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. அதேபோல,புதிய தயாரிப்புகளும் இந்த தினத்தில் கொட்டிக்கிடக்கும்.

வருடாந்திர ஷாப்பிங் டே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் ஜூலை 12 அன்று நடைபெறும். இந்தியாவைப்பொருத்தவரை ஜூலை 23 மற்றும் 24ல் நடைபெறவுள்ளது. நேரடி தள்ளுபடி மட்டுமின்றி குறிப்பிட்ட வங்கிகளுக்கு பிரத்யேக ஆஃபரும் வழங்கப்படும்.

இது குறித்து தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், '' எங்களது 6வது ப்ரைம் டே இந்தமுறை பெரியதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்.  ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆஃபர்களை கொடுக்க விரும்புகிறோம். இந்த தள்ளுபடி நாளில் புதிய தள்ளுபடியலும், புதிய பொருட்களின் வரவாலும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் பயன்பெறுவார்கள். இந்த ஆஃபர் டேவால் புதிய வாடிக்கையாளர்கள் வரவும் இருக்குமென எதிர்பார்க்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

என்ன சிறப்பு?

குறிப்பிட்ட வகை செல்போனுக்கு 40% வரை விலைதள்ளுபடி கிடைக்கும் எனத் தெரிகிறது. அதேபோல லேப்டாப்,  ஹெட்போன்,ஸ்மார்ட் வாட்ச்,டேப்லட் போன்ற பொருட்களுக்கு 75% அப்டூ வரை  தள்ளுபடி இருக்குமென தெரிகிறது. அதேபோல டிவி, வாஷிங்மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கு அப்டூ 50% வரை தள்ளுபடி கிடைக்குமென தெரிகிறது.