ஆண்ட்ராய்டு பயனர்கள் கின்டில் ஆப்பில் புத்தகங்களை இனி வாங்க முடியாது என்று Amazon வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோர்..
சில வாரங்களுக்கு முன்பு, கூகுள் ப்ளே ஸ்டோர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஒரு ஆப்பிற்குள் சென்று ஏதாவது வாங்குவது என்றால் அதற்கு ப்ளே ஸ்டாரின் பில்லிங் சிஸ்டத்தை பயன்படுத்தாத ஆப்களை நீங்குவதாக அறிவித்து இருந்தது. அதன் படி பல ஆப்கள் பாதிக்கப்பட இருந்தன. ஆனால் கூகுள் ப்ளே ஸ்டாரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டால், தொடரலாம் என்பதால் பெரும்பாலான ஆப்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் அமேசான் மட்டும் முரண்டு பிடித்து வந்தது.
எது எதற்கு நிபந்தனை?
இலவச ஆப்பிற்கான மேம்படுத்தப்பட்ட பெய்டு வெர்ஷனை பெறுவதற்கான கட்டணம் வசூலிப்பதற்கும், கூகுள் ப்ளே ஸ்டோரின் பில்லிங் சிஸ்டத்தையே பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாற்றங்கள், பொருட்கள் வாங்கப்படும் ஆப்களுக்கு கிடையாது. பொருட்கள், துணி, உணவு பொருட்களுக்கான ஆப்களுக்கும் ,சூதாட்ட ஆப்கள் ஆன ரம்மி சர்கில், ஏஸ்2த்ரீ, ட்ரீம் லெவன் போன்ற ஆப்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தாது.
15% கமிஷன்
ப்ளே ஸ்டோர் பில்லிங் சிஸ்டத்தில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கூகுள் 15 சதவீத கமிஷன் எடுத்துக்கொள்கிறது. முன்பு இது 30 சதவீதமாக இருந்தது, ஆனால் கூகுள் மற்றும் ஆப்பிளின் டெவலப்பர்கள் இதனை கடுமையாக எதிர்தமையால் பாதியாக குறைக்கப்பட்டது. ஆனால் கூகுள் ப்ளே ஸ்டோர் 2020லேயே எந்த ஒரு ஆப்பாக இருந்தாலும், ஆப்பிற்குள் செய்யப்படும் பர்சேசிற்கு கூகுள் ப்ளே ஸ்டோரின் பேமெண்ட் சிஸ்டத்தையே பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமலுக்கு வந்துவிட்டது
புதிய கொள்கைக்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. புதிய முறைக்கு இணங்காத அனைத்து ஆப்களையும் Google அகற்றும். அமேசான் ஏற்கனவே ஆண்ட்ராய்டுக்கான கின்டில் ஆப்பில் மாற்றத்தை செயல்படுத்தியுள்ளது. ஆண்டராய்டு மொபைலில், அந்த ஆப்பில் இனி புத்தகங்கள் வாங்கக் கிடைக்காது என்ற அறிவிப்பை காட்டுகிறது. இந்த தடை கின்டில் ஆப்புக்கு மட்டும் அல்ல, அமேசானின் ஆடிபுள் மற்றும் அமேசான் மியூசிக் ஆப்களிலும் இனி எதையும் வாங்க முடியாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்