10 நிமிடங்களில்..


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதுபான விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் மது பிரியர்களுக்கு ஏற்ப மது விற்பனை கலை கட்டி வருகிறது. அந்தவகையில் தற்போது 10 நிமிடங்களில் மது கிடைக்கும் வசதி ஒன்றை ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது. 


ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் பூஸி (Boozie) என்ற நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் கொல்கத்தாவில் தன்னுடைய புதிய சலுகை அமல்படுத்த உள்ளது. அதன்படி இனிமேல் மது ஆர்டர் செய்பவர்களுக்கு 10 நிமிடங்களில் டெலிவரி ஆகும் வசதியை தொடங்கியுள்ளது. 


புதிய சேவை


இந்த வசதியை அமல்படுத்த இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் டெலிவரி பகுதிகளை கண்டறிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பத்து நிமிட டெலிவரிக்கு கொல்கத்தா அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தப் புதிய சேவை முதலில் கொல்கத்தாவின் கிழக்கு பகுதியில் அமலுக்கு வர உள்ளது. 




இந்தப் புதிய தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் டெலிவரி விலை சற்று குறையும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் பயன் அளிக்கும். அத்துடன் டெலிவரி விலை அதிகமாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மது பிரியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக 10 நிமிடங்களில் மதுபான டெலிவரியை இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க உள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா


முன்னதாக கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் மதுபானங்களை வீட்டிற்கு டெலிவரி செய்யும் வசதிக்கு அனுமதியை அம்மாநில அரசு வழங்கியிருந்தது. நேற்று அந்த வீட்டிற்கு மதுபானம் டெலிவரி செய்யும் வசதியை திரும்ப பெற உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தச் சூழலில் கொல்கத்தாவில் 10 நிமிடங்களில் வீட்டிற்கு மதுபான டெலிவரி தொடர்பான வசதி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க:ரயில்வே அறைக்கு வந்த அழையா விருந்தாளி: ஸ்டேஷன் அதிகாரியுடன் அதகளம் செய்த ராஜநாகம்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண