கடந்த 24 மணி நேரத்தில் 2,58,089 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, இந்த எண்ணிக்கை 16,56,341ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 1,05,964 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர்:
நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3.5 கோடியை (3,52,37,461) கடந்தது. குணமடைந்தோர் வீதம் 94.27 சதவீதத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,51,740 பேர் கொரோனா தொற்றில் இருந்து குனமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 3,490 பேர் குறைந்துள்ளனர்.
கொரோனா உயிரிழப்பு: கொரோனா பாதிப்பால் நாட்டில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 385 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை (4,86,451) நெருங்குகிறது.
மறுபுறம், ஒமிக்ரான் தொற்று முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்ரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒமிக்கிரான் ரக தொற்று பரவலை சாதாரண ஜலதோஷத்தைப் போன்று கருதக்கூடாது என்று, நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் முன்னதாக எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உச்சக்கட்ட பாதிப்பு:
மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில், சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா அலை தனது உச்சக்கட்ட பாதிப்பை அடைந்தது. மும்பையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.
மும்பை தினசரி பாதிப்பு: (ஜனவரி 12 அன்று உச்சத்துக்கு சென்றது)
ஜனவரி 12 | 17087 |
ஜனவரி 13 | 13069 |
ஜனவரி 14 | 10765 |
ஜனவரி 15 | 10186 |
அதேபோன்று, டெல்லி பெருநகரத்திலும் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடைந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸின் தன்மை,தொற்றுப் பரவல் இயக்கவியல், தடுப்பூசிகள் செலுத்துதல், ஊரடங்கு போன்ற மருந்து அல்லாத தலையீடுகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கோவிட்-19 அலையின் உச்சக் காட்ட பாதிப்பு (Covid-19 Peak) அமைகிறது. கணித மாதிரியின் (Mathematical Modelling) துணைக் கொண்டு கொரோனா பரவல் போக்கினை இந்திய விஞ்ஞானிகள் கணக்கிடு வருகின்றனர்.
தேசிய அளவில் ஜனவரி 23ம் தேதியன்று கொரோனா மூன்றாவது அலை உச்சத்துக்கு செல்லும். அன்றைய தினத்தில், நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.