ஒரு சில நேரங்களில் பாம்பு கடித்த பிறகு சிலருக்கு விஷயம் மூலம் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் பாம்பு கடித்த பெண் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையை நாடிய இரண்டு வாரங்களுக்கு பிறகு அந்த பாதிப்பு சற்றும் இல்லாமல் முழுவதுமாக குணம் அடைந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் மிகவும் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். அவருடைய உடம்பு முழுவது வீக்கம் ஏற்பட்டு நிலையில் அந்தப் பெண் இருந்துள்ளார். அத்துடன் அவருடைய சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்கு சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பெண்ணின் ரத்து அணுக்களுக்கும் குறைந்து கொண்டே வருவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது அந்த பெண்ணிற்கு பாம்பு கடித்ததால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் Hemolytic Uremic Syndrome என்ற அறிய வகை நோய் பாதிப்பும் அவருக்கு ஏற்பட்டது தெரியவந்தது. இதன்காரணமாக அவருக்கு டயாலிசிஸ் செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் டயாலிசிஸ் உடன் அவருடைய ரத்த பிளாஸ்மா மாற்றும் சிகிச்சையும் வழங்கியுள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரலையில் காண இங்கே க்ளிக் செய்யவும்
சுமார் 6 வாரங்கள் அவருக்கு டயாலிசிஸ் மற்றும் ரத்த பிளாஸ்மா மாற்றும் சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. அதில் பாதிப்பு அடைந்திருந்த ரத்த பிளாஸ்மாவிற்கு பதிலாக நல்ல பிளாஸ்மா ரத்தத்தில் ஏற்றப்பட்டுள்ளது. 6 வார தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது அந்த பெண்ணின் சிறுநீரகம் மீண்டும் சீராக செயல்பட தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அறிய வகை பாதிப்பிலிருந்து மீண்டும் முழுமையாக குணம் அடைந்தது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவர், “இந்திய போன்ற நாடுகளில் பாம்பு கடிப்பதால் பலர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பாம்பு கடிப்பதால் ஏற்படும் சிறுநீரக பிரச்னை மிகவும் ஆபத்தானது. இந்த பிரச்னையிலிருந்து ஒருவர் முழுவதுமாக குணம் அடைவது மிகவும் எளிதல்ல. ஆனால் எங்களுடைய மருத்துவமனைக்கு வந்த பெண் நன்றாக குணம் அடைந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.
Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலையில் பார்த்து மகிழுங்கள்!
மேலும் படிக்க: பஞ்சாப்பை நவீனமாக்க எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்த நவ்ஜோத்சிங் சித்து...!