பொதுவாக பண்டிகை காலம் என்றால் ஜவுளி கடை, நகைக்கடை தொடங்கி அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதும். மேலும் பல கடைகள் இந்த பண்டிகை நாட்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல சலுகைகளை அறிவிப்பார்கள். அந்தவகையில் சமீப காலங்களாக தீபாவளி மற்றும் ஆயுத பூஜை ஆகிய பண்டிகளை குறி வைத்து ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இ-வர்த்தக தளங்கள் தங்களுடைய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் தற்போது நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தீபாவளியை குறிவைத்து பண்டிகை அமேசான் நிறுவனம் பண்டிகை சலுகைகளை அறிவித்து வருகிறது. 


அந்தவகையில் தற்போது சாம்சங் 21 மற்றும் சாம்சங் 31 ஆகிய மொபைல் போன்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. அந்த மொபைகளின் பண்டிகை கால விலைகள் என்னென்ன? அதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?


சாம்சங் கேலக்ஸி எம்-31 (கருப்பு, 8 ஜிபி, 128 ஜிபி ஸ்டோரேஜ்):


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்-31 மொபைலுக்கு அமேசான் நிறுவனம் பெரியளவில் சலுகைகளை அறிவித்துள்ளது. சாதாரண நாட்களில் இந்த மொபைல் போனின் விலை 21,999 ரூபாயாக உள்ளது. அந்த விலையில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் சலுகை மற்றும் 1500 ரூபாய் கேஷ்பேக் உள்ளிட்டவை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய போன்களை மாற்றினால் 14,990 ரூபாய்க்கு இந்த போனை வாங்க முடியும். இந்த போனின் சிறப்பு அம்சங்களாக 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 64 மெகாபிக்சல் கேமரா, 32 மெகா பிக்சல் முன் கேமரா வசதி ஆகியவை உள்ளன. மேலும் இரண்டு சிம் வசதி மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. 




சாம்சங் கேலக்ஸி எம்-21(4 ஜிபி, 64 ஜிபி):


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி மாடலில் மேலும் ஒரு சிறப்பான போன் எம்-21. இந்த மொபைல் போனின் சிறப்பு அம்சங்களாக 48+8+5 மெகா பிக்சல் கேமரா அமைந்துள்ளது. மேலும் இதில் 20 மெகா பிக்சல் முன் கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இதில் உள்ளது. இந்த மொபைலின் விலை சாதாரண நாட்களில் 14,999 ரூபாயாக இருக்கிறது. ஆனால் தற்போது உள்ள தீபாவளி சேலில் இந்த போனின் விலை 11,999 ரூபாயாக உள்ளது. இவை தவிர ஆர்பிஎல் வங்கி கார்டுகளிலும் மேலும் சில ஆஃபர்களை அமேசான் தளம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: அமேசான் ஆஃபரில் அள்ளும் ஸ்மார்ட்வாட்சுகள்.. இதுக்கு முன்னாடி இப்படி ஆபர்ஸ் வந்ததில்ல