தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களுக்கு 28 நாட்கள் வரையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தன. ஆனால் 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என TRAI அறிவுறுத்தியதை அடுத்து ஜியோ தனது பயனாளர்களுக்கான 30 நாட்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.


அதையும் தாண்டி தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 56 நாட்கள் பிளானில் போட்டாப் போட்டியை கடைபிடிக்கின்றன. எவ்வளவு புதிய பிளான்கள் வந்தாலும் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்குள் எந்த பிளான் வருகிறதோ அந்த பிளான்தான் சிறந்த பிளானாக கருதப்படுகிறது. இந்த வகையில் 56 நாட்கள் வேலிடிட்டி வேகமெடுத்து வருகிறது.


அதில் ஜியோ, ஏர்டெல் பிளான்களை ஒப்பிட்டுப் பார்ப்போம்.


ஜியோவின்  56 நாட்கள் திட்டம்


ரூ.479 விலையில் ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த ப்ளான் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.  தினமும்  1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 குறுச்செய்திகளை நீங்கள் அனுப்பலாம். ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆகிய சேவைகளும் அடங்கும். மேலும் வரம்பற்ற  குரல் அழைப்புகளும் வழங்கப்படுகிறது.


ஏர்டெலின் 56 நாட்கள் திட்டம்


வாடிக்கையாளர்கள் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் ரீசார்ஜ் செய்தால், 56 நாட்கள் வேலிடிட்டி தரப்படுகிறது. தினமும் 1.5 ஜிபி டேட்டா  வழங்கபப்டுகிறது. வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 குறுச்செய்திகள், அமேசான் ப்ரைம் வீடியோ இலவச டிரயல் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது.


காலாண்டு வருவாய் உயர்வு:


இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் கடந்த நிதி ஆண்டை ஒப்பிடுகையில் வருவாய் உயர்ந்துள்ளது. 2021- 2022 ஆம் நிதி ஆண்டில் கடந்த ஆண்டை விட நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ.2,008 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நான்காம் காலாண்டு நிகர லாபமானது ரூ.759 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த நிதி ஆண்டு (2020-21) நான்காம காலாண்டுக்கான வருவாய் ரூ.25,747 கோடியாக இருந்தது. தற்போது (2021- 22) ஆம் நிதி ஆண்டு நான்காம் காலாண்டில் 22.3 சதவீதம் அதிகரித்து ரூ.31,500 கோடியாக உயர்ந்துள்ளது.


இந்தச் சூழலில், 56 நாட்கள் ப்ளான் வேலிடிட்டியில் ஜியோ நிறுவனம் இன்னும் கல்லா கட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. செல்போன் இல்லாத நபரே அரிது என்று கூறப்படும் இந்தக் காலகட்டத்தில் 5ஜி சேவையும் வந்துவிட்டால் இன்னும் என்னென்ன ப்ளான் எல்லாம் வருமோ?


ப்ளான்களை சரியாக தேர்வு செய்து ரீசார்ஜ் செய்துகொண்டால், டேட்டாவும் சேமிக்கலாம், டாக் டைமும் சேமிக்கலாம்