`நேர்கொண்ட பார்வை’, `வலிமை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் இணைகின்றனர். `வலிமை’ திரைப்படம் அதன் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், பெரிதும் வெற்றியைப் பெறவில்லை. அதன் கதை, திரைக்கதை ஆகியவற்றிற்காக பெரிதும் விமர்சனம் செய்யப்பட்டது `வலிமை’ திரைப்படம்.


தொடர்ந்து வலிமை திரைப்படம் Zee 5 இல் OTT தளத்தில் படம் வெளியானது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச். வினோத்துடன் இணைந்துள்ளார்.'ஏகே 61' ஒரு வங்கிக் கொள்ளை திரைப்படம் என்றும், இதில் அஜித் குமார் எதிர்மறையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், நடிகர் அஜித் குமார் தனது பிஎம்டபிள்யூ பைக்கில் பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏகே 61 படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நீண்ட வெள்ளை தாடியுடன் பைக்கில் உட்கார்ந்து இருக்கிறார், தற்போது இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் இணைய பக்கங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 



அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, அஜித் குருவாரூர் கோயிலில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் மால் ஒன்றில் எடுத்த புகைப்படமும் படு வைரலானது. 






'ஏகே 61' படம் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். ‘ஏகே 61’ படத்திற்கான அஜித்தின் தோற்றமும் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. தற்போதைய நிலவரப்படி அதிதி ராவ் ஹைதாரி, தபு, யோகி பாபு பிரகாஷ் ராஜ் மற்றும் கவின் ஆகியோர் முக்கிய நடிகர்கள் என்று கூறப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண