போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கான அமேசான் ப்ரைம் சப்ஸ்கிரிப்ஷன் வேலிடிட்டியை குறைத்துள்ளது ஏர்டெல்.  5 போஸ்ட்பெய்ட் ப்ளான்கள் மூலம் அமேசான் ப்ரைம் சப்ஸ்கிரிப்ஷன் கொடுத்திருந்தது ஏர்டெல். அந்த ப்ளான்களுக்கு தற்போது இந்த வேலிடிட்டி குறைப்பு பொருந்தும்.


முன்னதாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஓடிடி ப்ளாட்பார்ம்களை இலவசமாக ஒரு குறிப்பிட்ட ப்ளான்களுக்கு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் தன்னுடைய போஸ்ட் பெய்ட் திட்டங்களான ரூ. 499,ரூ. 999, ரூ. 1199, மற்றும் ரூ. 1599 ஆகிய ப்ளான்களுக்கு அமேசான் ப்ரைம் சப்ஸ்கிரிப்ஷனை ஒரு வருடத்துக்கு இலவசமாக கொடுத்து வந்தது. அந்த ஒருவருட வேலிடிட்டி தற்போது 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


வேறு எந்த ஓடிடிக்கும் மாறுதல்களை ஏர்டெல் அறிவிக்கவில்லை. ஹாட்ஸ்டாருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வருட வேலிடிட்டி அப்படியே தொடரும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. அமேசான் ப்ரைம் தங்களுடைய கட்டணத்தை மொத்தமாக அதிகபடுத்தியதால்தான் இந்த வேலிடிட்டி குறைக்கக்காரணம் எனவும் கூறப்படுகிறது.


அமேசானில் ஆண்டு சந்தா, 6 மாத சந்தா, 3 மாத சந்தா பல மெம்பர் ஷிப்கள் உள்ளன. இந்த மெம்பர் ஷிப்பை பயன்படுத்தி, அமேசான் போர்ட்டலில் ஷாப்பிங் செய்து கொள்வதுடன், அதன் இலவச டெலிவரி சலுகையையும் பெற முடியும். இந்த நிலையில் இந்த மெம்பர்ஷிப் தொகையானது கடந்த டிசம்பரில் அதிகமானது. முன்னதாக, அமேசான் ப்ரைமுக்கான மெம்பர் ஷிப்பின் ஆண்டு சந்தா 999 ரூபாயாகவும், 3 மாத சந்தா ரூ 329 ரூபாயாகவும், மாத சந்தா 129 ரூபாயாகவும் இருந்தது.அது, 999 ரூபாயாக இருந்த ஆண்டு சந்தா 1499 ரூபாயாகவும், 329 ரூபாயாக இருந்த 3 மாத சந்தா 459 ரூபாயாகவும்,  129 ரூபாயாக இருந்த மாத சந்தா 179 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்