அதிகம் பயன்பாட்டில் உள்ள நெட்வொர்க்கில் ஒன்றான ஏர்டெல், பல புதிய திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. புதிய ப்ளான்களை அறிமுகம் செய்வது மட்டுமின்றி சில நேரங்களில் பழைய ப்ளான்களையும் நீக்கி விடுகிறது. அந்த வகையில் 3 முக்கிய ப்ளான்களை ஏர்டெல் நீக்கிவிட்டது. ரீசார்ஜ் திட்டங்களான  ரூ.179, ரூ.279 ஐ  அடித்து தூக்கியது ஏர்டெல். இதுமட்டுமின்றி முக்கிய பட்ஜெட் ரீசார்ஜான ரூ.45 ப்ளானையும் நீக்கிவிட்டது.


ரூ.279 ப்ளான்:
ரூ.279 ப்ளானானது 28 நாட்களுக்கு அன்லிமிடெட்  காலிங் வசதி, ஒருநாளைக்கு 100 எஸ் எம் எஸ் மற்றும் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி நெட் போன்ற வசதிகளை கொடுத்தது. இது மட்டுமின்றி விங்க் மியூசிக் பயன்பாடு, HDFC லைஃப் இன்சூரன்ஸ் போன்ற சில வசதிகளும் கிடைக்கப்பெற்றன. இந்த ப்ளான் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ப்ளானுக்கு பதிலான பயனாளர்கள்  ரூ.249 ப்ளானை பயன்படுத்தலாம். இந்த ப்ளானிலும் 28 நாட்களுக்கு 100 எஸ் எம் எஸ் தினமும் 1.5 ஜிபி இண்டர்நெட் கிடைக்கும். இந்த ரீசார்ஜில் சிறப்பு ஆஃபராக ஒரு மாத அமேசான் ப்ரைம் இலவசமாக கிடைக்கிறது.




ரூ.179
28 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதி, 2 ஜிபி நெட், 300 எஸ் எம் எஸ் போன்ற வசதிகளை கொடுத்த ரூ.179 ப்ளான் இப்போது இல்லை. இதற்கு பதிலாக வருட திட்டமான ரூ2498 ப்ளானை கையில் எடுக்கலாம். வருடத்திற்கு ரூ.2498 என்றால் மாதத்திற்கு ரூ.208 என்ற விலையே வரும். வாய்ஸ் காலிங், இண்டர்நெட் மட்டுமின்றி அமேசான், விங்க் மியூஸிக், ஹலோடியூன்ஸ், பாஸ்டேக் ஹேஸ்பேக் போன்ற ஆபர்களும் கிடைக்கப்பெறும். வருடாந்திர ரீசார்ஜ் வேண்டாம் என்ற்ரால் நீங்கள் ரூ.298 ப்ளானை பயன்படுத்தலாம். இது ரூ.2498க்கான அதே சிறப்பு வசதிகளை கொடுக்கிறது.


ரூ.45
ஏர்டெல்லின் பட்ஜெட் ரீசார்ஜாக கருதப்பட்ட ரூ.45 ப்ளான் ரீசார்ஜும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் புதியதாக ரூ.128 ரீசார்ஜ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் அன்லிமிடெட் காலிங், இண்டர்நெட் போன்ற வசதிகள் இல்லை.  லோக்கல் மற்றும் எஸ்டிடி காலிங் ஒரு நொடிக்கு 2.5 பைசா மற்றும் லோக்கல் எஸ் எம் எஸ் ரூ.1 மற்றும் நேஷ்னல் எஸ் எம் எஸ் ரூ.1.5 என்ற வசதிகளை கொண்டது. இதுவும் 28 நாள் வேடிடிட்டி கொண்டதுதான். அப்படியான பட்ஜெட் ரீசார்ஜே இல்லையா என்று கேட்பவர்களுக்கு கைகொடுக்கிறது ரூ.49 ப்ளான். 38.53 ரூபாய்க்கான டாக்டைம், 100mb நெட் வசதியை கொடுக்கிறது.




கடும் போட்டி காரணமாக நெட்வொர்க் நிறுவனங்கள் பல ப்ளான்களை அறிமுகம் செய்து வருகின்றன. மிக விரைவில் 5ஜி சேவையும் அறிமுகமாகவுள்ளதாக ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் 5ஜி சோதனையையும் தொடங்கிவிட்டன.  5ஜி வருகைக்கு பின்னர் இன்னும் பல மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Airtel | 199 ரூபாயில் சிறப்பு சலுகை அளிக்கும் ஏர்டெல் - சலுகை என்ன?