தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு இடையே போட்டா போட்டி நிலவுவது இயல்பு. இவ்விரண்டு நிறுவனங்களும்தான் அதிகப்படியான சந்தாதர்களை கொண்டுள்ளனர். ஜியோ குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு திட்டங்களை அறிமுகப்படுத்தினால் , ஏர்டெல் நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை வழங்கும். இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களும் அறிமுகப்படுத்தியிருக்கும் 200 ரூபாய்க்கும் குறைவான ப்ரீப்பெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
ஜியோ
ரூ 11 திட்டம்:
இதன் 1 ஜிபி கூடுதல் டேட்டாவை பெற முடியும்.
ரூ 51 திட்டம் :
6ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ரூ101 திட்டம் :
12 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை பயன்படுத்தலாம்.
ரூ151 திட்டம் :
இதன் மூலம் 30 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை பயன்படுத்தலாம்
ரூ 149 திட்டம்:
இந்த திட்டத்தின் கால வரம்பு 24 நாட்கள் ஆகும் , இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வீதம் மாதம் 24 டேட்டா சேவை கிடைக்கிறது, மேலும் ஒரு நாளுக்கு 100 sms வீதம் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ ஆப்ஸ் சப்ஸ்க்ரிப்ஷனும் கிடைக்கிறது.
ரூ199 திட்டம்:
இந்த திட்டத்தின் கால அவகாசம் 28 நாட்கள் ஆகும். இதில் மொத்தம் 42 ஜிபி டேட்டாக்களை பெற முடியும் . நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாக்களை 64kbps வேகத்தில் பெற்றுக்கொள்ளலாம் . மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வரம்பின்றி செய்துகொள்ளலாம். 100 SMS-களை நாள் ஒன்றுக்கு பயன்படுத்தலாம். இது தவிர ஜியோ ஆப்ஸ் சப்ஸ்க்ரிப்ஷனும் கிடைக்கிடறது.
ஏர்டெல்:
ரூ 19 திட்டம் :
இந்த திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 200MB அளவிலான கூடுதல் டேட்டாக்களை பெற முடியும்,
ரூ129 திட்டம் :
இந்த திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி வீதம் 24 நாட்கள் கால வரம்புடன் பயன்படுத்தலாம்.அழைப்புகள் இலவசம் மற்றும் ஒரு நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ்களை அனுப்பலாம். மேலும் அமேசான் ப்ரைம் 30 நாள் இலவச இணைப்பை ஸ்டீமிங் செய்யாலம், ஏர்டர் எக்ஸ்ட்ரீம் , விங் மியூசிக் உள்ளிட்ட அனுகலையும் இலவசமாக பெற முடியும்.
ரூ 149 திட்டம் :
இது 28 நாட்களுக்கு கால வரம்புடையது. நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பெற முடியும். மொத்தமாக 300 எஸ்.எம்.எஸ்களை பெற முடியும். அமேசான், ஏர்டர் எக்ஸ்ட்ரீம், விங் மியூசிக் உள்ளிட்ட அணுகலையும் இலவசமாக பெறமுடியும். 2 லட்சம் வரையிலான பாரதி ஆக்சா லைஃப் காப்பீட்டு திட்டத்தினை நிபந்தனைகளுடன் வழங்குகிறது
ரூ.179 திட்டம் :
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாக்களை பெற முடியும் ,இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். 28 நாட்களுக்கான அழைப்புகள் இலவசம் மேலும் ஒரு நாளுக்கு 100 எஸ் எம் எஸ் வீதம் 300 எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்ப முடியும். இது தவிற அமேசான் ப்ரைம் 30 நாள் இலவச இணைப்பை ஸ்டீமிங் செய்யாலம், ஏர்டர் எக்ஸ்ட்ரீம் , விங் மியூசிக் உள்ளிட்ட அனுகலையும் இலவசமாக பெற முடியும்.2 லட்சம் வரையிலான பாரதி ஆக்சா லைஃப் காப்பீட்டு திட்டத்தினை நிபந்தனைகளுடன் வழங்குகிறது
ரூ 199 திட்டம் :
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும், 100 எஸ்.எம்.எஸ் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 24 நாட்கள் . அமேசன் பிரைம், விங் மியூசிக் மற்றும் ஏர்ட்டெல் எக்ஸ்ட்ரீம் அனுகலை பெற முடியும். ஜியோ மற்றும் ஏர்டலை ஒப்பிடுகையின், ஜியோ நிறைய பட்ஜெட் சேவைகளை அளித்துள்ளது.மேலும் ஜியோவின் கூடுதல் டேட்டா திட்டம் தற்போதுள்ள சூழலில் வீட்டில் இருந்து பணிபுரிவோருக்கு வசதியாக உள்ளது. அதே போல ஜியோவில் 149 ரூபாயில் கிடைக்கும் சேவையை ஏர்டெலில் பெறுவதற்கு 199 ரூபாய் செலுத்த வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.